இயற்கை விவசாயத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி – வேளாண் பட்ஜெட் அறிவிப்பு!

0
இயற்கை விவசாயத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - வேளாண் பட்ஜெட் அறிவிப்பு!

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் இன்றைய வேளாண் பட்ஜெட் தாக்கலில் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

வேளாண் திட்டங்கள்:

2024 – 25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் இன்று சட்டப்பேரவையில் காலை முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் வேம்பினை பரவலாக்க பத்து லட்சம் வேப்பமர கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்படும். இயற்கை விவசாயத்திற்கு இடுபொருள் தயாரித்தல் அமைக்க 100 குழுக்களுக்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

Cognizant நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!  

10 லட்சம் வேப்பமர கன்றுகள் வழங்கிட ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் சூரியகாந்தி பயிரிடும் பரப்பை  அதிகரிக்க ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். விளை பொருட்களை அறுவடைக்குப் பின் பாதுகாப்பாக வைப்பதற்கு மற்றும் இழப்பை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு கிடங்குகள் அமைக்கப்படும். 155 லட்சம் ஏக்கராக தமிழகத்தின் மொத்த சாகுபடி உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல்  கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!