சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு கோலாகலமாக வளைகாப்பு விழா – ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் நடித்த ஷாமிலிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சர்பாக மிகவும் கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது.
ஷாமிலி வளைகாப்பு :
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அர்ஜுன் மற்றும் ரோஜா ஜோடியின் காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் முதலில் 7 மணிக்கு ஒளிபரப்பானது. பிறகு 9 மணிக்கு மாற்றப்பட்டு அதே நேரத்தில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியல் விறுவிறுப்பாக தொடர்கிறது. ரோஜா தன் அம்மாவை சந்தித்து இருக்கிறாள். செண்பகத்துக்கு நினைவு திரும்புமா? குடும்பத்தினருக்கு உண்மை எப்போது தெரியும் என்ற எதிர்ப்பு பார்வையாளர்களுக்கு அதிகரித்துள்ளது.
சென்னை IIT எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ விண்ணப்ப பதிவு 2021 – இன்று முதல் தொடக்கம்!
இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் அணு என்ற கேரக்டரில் நடிகை ஷாமிலி நடித்து வந்தார். ரோஜாவை வீட்டை விட்டு அனுப்ப பல்வேறு திட்டங்களை திட்டினார். இந்த சீரியலில் வெற்றிக்கு நெகட்டிவ் ரோலில் நடித்த ஷாமிலி முக்கிய பங்கு வகித்தவர். இந்த நிலையில் நடிகை ஷாமிலி கர்ப்பமாக இருந்ததால் பாதியிலேயே சீரியலை விட்டு விலகினார். அதற்கு பதிலாக வேறு நடிகை மாற்றப்பட்டு சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அக்.1 முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி – மத்திய அரசு!
நடிகை ஷாமிலி தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை அவரின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் நடிகை ஷாமிலிக்கு தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மிகவும் கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ஷாமியின் புகைப்படத்தை லைக் செய்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்