சென்னை IIT எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ விண்ணப்ப பதிவு 2021 – இன்று முதல் தொடக்கம்!

0
சென்னை IIT எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ விண்ணப்ப பதிவு 2021 - இன்று முதல் தொடக்கம்!
சென்னை IIT எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ விண்ணப்ப பதிவு 2021 - இன்று முதல் தொடக்கம்!
சென்னை IIT எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ விண்ணப்ப பதிவு 2021 – இன்று முதல் தொடக்கம்!

பணியில் இருக்கும் ஆர்வமுள்ளவர்கள் எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்து பயனடையலாம். பட்ட படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பட்டப்படிப்பு:

தற்போது இளைஞர்களிடம் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது வருகிறது. எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பது குறித்து பெரும் குழப்பத்தில் உள்ளனர். எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை சென்னை ஐஐடி ஆன்லைன் வழியாக வழங்கி வருகிறது. இது 2 ஆண்டிற்கான பட்டபடிப்பாகும். சென்னை ஐஐடியின் மேலாண்மை படிப்புகள் துறை, நேரடி வர்த்தக பிரச்சினைகளுக்கான 3 திட்டங்கள் உட்பட கடுமையான பயிற்சி சார்ந்த பாடத்திட்டங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அக்.1 முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி – மத்திய அரசு!

இந்த பாடத்திட்டத்தில் டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய யுக்தி மற்றும் தொழில்துறை 4.0 தொழில்நுட்பங்கள் ஆகியவையாவும் தொழில் தேவைகளுடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வணிகத்துக்கு முக்கியமான சமூக ஊடகம் மற்றும் இன்டர்நெட் மார்க்கெட்டிங், பல தளங்களில் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய வர்த்தக மேலாண்மை, நவீன உற்பத்தி செயல்முறைகள் மற்றும் 3 டி பிரிண்டிங் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் கற்பதற்கான வசதிகள் வழங்கப்படும் எனவும் சைபர் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் உட்பட இதர முக்கியமான பாடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியல் – வெளியீடு!

இந்த பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2021. ஆர்வமுள்ளவர்கள் https://doms.iitm.ac.in/emba/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு, ஏதாவது இளநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், குறைந்தது 3 ஆண்டுகள் தொழில் துறை அனுபவம் இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் காணொலி மூலம் நேர்காணல் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!