‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இணைந்த நடிகர் ரியோ – விறுவிறுப்பாகும் அடுத்த கட்ட கதைக்களம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சிறப்பு எபிசோடு ஒன்று ஒளிபரப்பாகி இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அந்த கொண்டாட்டத்தில் நடிகர் ரியோ ராஜ் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டுமாக ஒரு கொண்டாட்டம் அரங்கேற இருக்கிறது. சீரியல்களில் வழக்கமாக ஒளிபரப்பப்படும் காட்சிகளை பார்த்து அலுத்து போகும் ரசிகர்களுக்கு ஏதாவதொரு விஷேசமான நாளில் ஒளிபரப்பாகும் கொண்டாட்ட எபிசோடுகள் உற்சாகத்தை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஸ்பெஷல் எபிசோடுகள் வெளியாகி பல நாட்கள் ஆகிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ – போட்டியாளர்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற வாய்ப்பு!
தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வரும் வரவிருக்கும் பண்டிகை தினத்தை முன்னிட்டு சில சிறப்பு காட்சிகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கொண்டாட்ட எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான படப்பிடிப்பு புகைப்படங்கள் அவ்வப்போது வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
Strategy Game விளையாடும் பிரியங்கா, நிரூப் & அபிஷேக் – வெளியான ‘பிக் பாஸ் 5’ ப்ரோமோ!!
அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இந்த சிறப்பு கொண்டாட்டத்தில் நடிகர் ரியோ ராஜ் பங்குபெற்றிருக்கிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இந்த சிறப்பு எபிசோடில் மூர்த்தி குடும்பத்துடன் இணைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பல இணையதளங்களில் வெளியாக இதன் மூலம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.