சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரை விமர்சனம் – படம் எப்படி இருக்கு?

0
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' திரை விமர்சனம் - படம் எப்படி இருக்கு?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' திரை விமர்சனம் - படம் எப்படி இருக்கு?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரை விமர்சனம் – படம் எப்படி இருக்கு?

தீபாவளி முன்னிட்டு திரைக்கு வந்துள்ள படங்களில் ஒன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த திரைப்படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ளது.

‘அண்ணாத்தை’ திரைப்படம்:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்துள்ள திரைப்படங்களில் ஒன்று தான் ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பூ, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஒரு அண்ணன், தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் கதையாக இயக்குனர் சிவா அவர்கள் வடிவமைத்துள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் அண்ணாத்த திரைப்படத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான்? வைரலாகும் லிஸ்ட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!!

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விஸ்வாசம் மற்றும் திருப்பாச்சி உள்ளிட்ட பாசம் நிறைந்த காட்சிகள் படத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. படத்தில் உள்ள பல்வேறு கதாபாத்திரங்கள் எதற்கு என்ற காரணம் புரியாத அளவில் இத்திரைப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் வில்லன்களாக அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு இருவரும் நடித்துள்ளனர்.

விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் புதிய மஹாவாக நடிகை மோனிஷா – உறுதியான தகவல்!

மேலும் ரஜினிகாந்த் அவர்களின் 90s ஜோடிகளான மீனா மற்றும் குஷ்பூ இருவரும் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. தங்கை தங்க மீனாட்சியிடம் பிரச்சனை செய்யும் வில்லன்களை அண்ணன் காளை திருப்பாச்சி அரிவாளை கொண்டு வதம் செய்வதே இந்த அண்ணாத்தை படம். இவ்வாறாக அனைவருக்கும் பிடித்த ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் ஒரு காட்சி கூட ரசிக்க முடியாத நிலையில் உள்ளதாக ரசிகர்கள் வட்டாரம் கூறுகிறது. இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே என்று மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!