8வது, 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை!

0
8வது, 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை!
8வது, 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை!
8வது, 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை!

தேனி மாவட்டம் வருவாய் துறையின் கீழுள்ள பேரிடர் மேலாண்மை குழுமம் 26.03.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Assistant, Office Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய முழுமையான விவரங்கள் எளிமையாக இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Revenue Department
பணியின் பெயர் Junior Assistant, Office Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பேரிடர் மேலாண்மை குழுமம் காலிப்பணியிடங்கள்:

தேனி மாவட்டம் வருவாய் துறையின் கீழுள்ள பேரிடர் மேலாண்மை குழுமம் வெளியிட்ட அறிவிப்பில் Junior Assistant பணிக்கு என 1 இடமும், Office Assistant பணிக்கு என 1 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jr. Assistant, OA கல்வி தகுதி:

Junior Assistant பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்குபவர் பணியில் பணிபுரிந்த முன்அனுபவ சான்று வைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

Best TNPSC Coaching Center – Join Now

Office Assistant பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Jr. Assistant, OA வயது வரம்பு:

Jr. Assistant, OA பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Jr. Assistant, OA ஊதியம்:

Jr. Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளருக்கு மாதம் தோறும் ரூ.13,000/- ஊதியமாக வழங்கப்படும்.

Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளருக்கு மாதம் தோறும் ரூ.9,100/- ஊதியமாக வழங்கப்படும்.

Jr. Assistant, OA தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அதில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Jr. Assistant, OA விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை 30.04.2022 இறுதி நாள் மாலை 5.00 மணிக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தேனி.

Revenue Department Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here