ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு எப்போது கட்டுப்பாடுகள் தளர்வு – மத்திய அரசு விளக்கம்

0

ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு எப்போது கட்டுப்பாடுகள் தளர்வு – மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மாநிலங்களில் கொரோனா பாதித்த பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதிகளவில் சோதனை:

இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்ததால் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் சில விதிமுறைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விதிமுறை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ரெட் zone பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகமானவர்களுக்கு சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள் – தமிழ்நாடு முதல் இடம்.!

கட்டுப்பாடுகள் தளர்வு:

கொரோனா வைரஸால் மகாராஷ்டிரம், தில்லி, தமிழகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ளவர்களுக்கு அதிகளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டு அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். அங்கு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் 4 வாரங்களுக்கு தொடர்ச்சியாக அப்பகுதிகளில் யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை எனில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் நான்காவது வாரத்தில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு !!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!