ரேஷ்மா, ஷபானாவை தொடர்ந்து அடுத்து திருமணம் செய்து கொள்ள உள்ள நட்சத்திர ஜோடி – ரசிகர்கள் குஷி!

0
ரேஷ்மா, ஷபானாவை தொடர்ந்து அடுத்து திருமணம் செய்து கொள்ள உள்ள நட்சத்திர ஜோடி - ரசிகர்கள் குஷி!
ரேஷ்மா, ஷபானாவை தொடர்ந்து அடுத்து திருமணம் செய்து கொள்ள உள்ள நட்சத்திர ஜோடி - ரசிகர்கள் குஷி!
ரேஷ்மா, ஷபானாவை தொடர்ந்து அடுத்து திருமணம் செய்து கொள்ள உள்ள நட்சத்திர ஜோடி – ரசிகர்கள் குஷி!

பல ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை உலகில் காதலர்களாக இருந்து வந்த சில நட்சத்திர ஜோடிகள் திருமணத்தில் இணைந்திருக்கிறது. இதையடுத்து சித்து மற்றும் ஷ்ரேயா ஜோடிக்கு தான் அடுத்த திருமணமா என ரசிகர்கள் வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நட்சத்திர திருமணம்

இந்த கால கட்டத்தில் நட்சத்திர திருமணங்கள் என்பது சர்வ சதாரணமாகி விட்டது. முன்பெல்லாம் சினிமா அல்லது சீரியலில் நடித்து வந்த ஒரு சில காதல் ஜோடிகள் தான் திருமணத்தில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இப்போது பல நடிகர், நடிகைகள் தன்னுடன் நடிக்கும் சக நண்பரை, தோழியை காதலித்து திருமணமும் செய்து கொள்கின்றனர். அதுவும் இப்போதுள்ள மீடியாக்களுக்கு முன்னால் தெரியாமல் காதல் செய்வது திரைத்துறையை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை – ‘பாரதி கண்ணம்மா’ நடிகை வினுஷா திரைப்பயணம்!

இதற்கு மத்தியில் ஒளித்து மறைத்து காதல் செய்து வந்த சில நட்சத்திர ஜோடிகள் தற்போது திருமணத்தில் இணைந்திருக்கிறது. அந்த வகையில் நடிகை வைஷாலி தணிகா தன்னுடைய நீண்ட நாள் காதலரான சத்ய தேவ் என்பவரை கரம் பிடித்தார். இவரை தொடர்ந்து ஜீ தமிழ் டிவியின் முன்னணி நடிகையான ஷபானா ஷாஜகான், நடிகர் ஆர்யனை திருமணம் செய்து கொண்டார். அடுத்ததாக ஜீ தமிழ் சீரியலின் நட்சத்திர ஜோடிகளான மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.

அந்த வகையில் இதற்கு அடுத்ததாக திருமணம் செய்துகொள்ள போகும் அந்த நட்சத்திர ஜோடி யார் என்று கேள்வி எழுப்பி வந்த ரசிகர்கள் அது கண்டிப்பாக சித்து மற்றும் ஷ்ரேயாவின் திருமணமாக தான் இருக்கும் என்று கணித்துள்ளனர். கலர்ஸ் டிவியின் ‘திருமணம்’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான சித்து மற்றும் ஷ்ரேயா ஜோடி நிஜத்தில் காதலித்து வந்தனர். வழக்கம் போல தங்களது காதலை மறைத்து, பாதுகாத்து வந்த இந்த ஜோடி இந்த உண்மையை ஒருநாள் ஒப்புக்கொண்டது.

திருமண பந்தத்தில் இணைந்த சீரியல் ஜோடி ரேஷ்மா மதன் – குவியும் வாழ்த்துக்கள்!

ஆனால் இப்போதைக்கு திருமணம் இல்லை என்று தெரிவித்திருந்த சித்து மற்றும் ஷ்ரேயா ஜோடி, நேற்று நடைபெற்ற மதன் மற்றும் ரேஷ்மா திருமணத்துக்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இப்போது இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் அடுத்தது சித்து, ஷ்ரேயாவுக்கு தான் திருமணம் என கிளப்பி விட்டுள்ளனர். இப்போது நடிகர் சித்து விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ தொடரிலும், நடிகை ஷ்ரேயா திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!