மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீட்டு வாடகைப்படி உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வீட்டு வாடகைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வீட்டு வாடகைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீட்டு வாடகைப்படி உயர்வு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக வீட்டு வாடகைப்படியும் உயர்த்தப்படும் என்ற தகவல் வந்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாடகைபடி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த 2021ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை மீண்டும் வழங்கும்படி அனைத்து மத்திய ஊழியர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனடிப்படையில் அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தப்பட்டது. தற்போது 31% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட 31% அகவிலைப்படி ஆனது 2019ம் ஆண்டு முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை ஒரே தவணையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 3, 4 VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய நடைமுறைகள் வெளியீடு!

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தில் இருந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது 2022ம் தொடங்கியுள்ளதை அடுத்து மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 அல்லது 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு உயர்ந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி அதிகரிக்கும். அதன்படி அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறும் நபர் 31 சதவீத அகவிலைப்படி ரூ.17,639 மாதம் கிடைக்கும்.

ஜனவரி 22 முதல் 2 நாட்களுக்கு வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அதனை தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. மத்திய அரசு ஊழியர்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப 27%, 18%, 9% என வீட்டு வாடகைப்படி தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அகவிலைப்படியை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படியும் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அகவிலைப்படி உயர்வு பற்றி தகவல் வந்த பின் வீட்டு வாடகைப்படியும் உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் வட்டாரம் கூறுகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!