Airtel, VI, Jio, BSNL நிறுவனங்களில் ரூ.100க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

0
Airtel, VI, Jio, BSNL நிறுவனங்களில் ரூ.100க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Airtel, VI, Jio, BSNL நிறுவனங்களில் ரூ.100க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Airtel, VI, Jio, BSNL நிறுவனங்களில் ரூ.100க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரூ. 100க்கு கீழ் Airtel, VI, Jio, BSNL ஆகிய நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

தற்போது உள்ள சூழ்நிலையில் பல அரசு மற்றும் தனியார் திட்டங்களை பெற ஸ்மார்ட் போன் அவசியமாகிறது. அனைத்து சேவைகளும் ஸ்மார்ட் போனிற்குள் வந்துள்ளதால் பலர் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக ஸ்மார்ட் போன் மாறிவிட்டது. அதை சாதகமாக பயன்படுத்தி Airtel, VI, Jio, BSNL போன்ற முன்னணி தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயனரின் தேவைகளுக்கும் ஏற்றவாறு நிறுவனங்கள் திட்டங்களைக் கொண்டுள்ளன.

ரயில்களில் பயணம் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு

இந்த திட்டங்கள் 14 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை செல்லுபடியாகும். குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டத்தை தேர்வு செய்ய விரும்புவர்களுக்கு சூப்பர் திட்டம் எது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஏர்டெல், விஐ, ஜியோ, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் ரூ.100-க்கும் குறைவான டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் 2 ஜிபி முதல் 9 ஜிபி வரை டேட்டா கிடைக்கிறது.

BSNL திட்டங்கள்:

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.100க்கு குறைவாக ரூ.13 முதல் ரூ.56 வரையிலான திட்டங்களை கொண்டுள்ளது. இதில் 2 ஜிபி முதல் 10 ஜிபி வரை டேட்டா கிடைக்கும். ஒரு நாள் வேலிடிட்டியுடன் மொத்தம் 2 ஜிபி டேட்டாவை 13 ரூபாய்க்கும், ரூ.48 திட்டம், 30 நாள்கள் வேலிடிட்டியுடன் இருக்கிறது. இதில் மொத்தம் 5 ஜிபி டேட்டா கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், 10 நாள்கள் செல்லுபடியாகும் ரூ.56 திட்டத்தில், மொத்தம் 10 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

ஏர்டெல் திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனம் ரூ.19 முதல் ரூ.301 வரையிலான திட்டங்களை வழங்குகிறது. ஏர்டெல் 24 மணிநேர வேலிடிட்டியுடன் ரூ.19 திட்டத்தைக் கொண்டுள்ளது . இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும். ஏர்டெல் ரூ.58 டேட்டா ரீசார்ஜ் திட்டமானது மொத்தம் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.98 திட்டத்தில் 5 ஜிபி டேட்டாவும், ரூ.108 திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. உங்களின் தற்போதைய திட்டங்களுக்கு ஏற்ப இதன் வேலிடிட்டி இருக்கும். ஏர்டெல்லின் ரூ.98 திட்டத்தில் Wynk Music Premium வழங்கப்படுகிறது. ரூ.108 திட்டத்தில் Amazon Prime வீடியோவிற்கான இலவச சந்தா கிடைக்கிறது.

ஜியோ திட்டங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ ரூ.25, ரூ.61 மதிப்புள்ள இரண்டு மலிவான டேட்டா திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ.25 திட்டத்தில் 2ஜிபி டேட்டாவும், ரூ.61 திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. உங்களின் தற்போதைய திட்ட கால அளவிற்கு இது செல்லுபடியாகும். மொத்தம் 12 ஜிபி டேட்டாவுடன் ரூ.121 திட்டத்தையும் ஜியோ கொண்டுள்ளது.

விஐ திட்டங்கள்:

வோடபோன் ஐடியாவும் ரூ.100க்கு குறைவான மூன்று திட்டங்களை கொண்டுள்ளது. ரூ.19 டேட்டா திட்டத்தில் மொத்தம் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதற்கு ஒரு நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ரூ.48 திட்டத்தில் 21 நாள்களுக்கு 2 ஜிபி டேட்டாவும், ரூ.98 திட்டத்தில் 21 நாள்களுக்கு மொத்தம் 9 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!