கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகியது ஏன்? சோயிப் அக்தர் பேட்டி!

0
கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகியது ஏன்? சோயிப் அக்தர் பேட்டி!
கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகியது ஏன்? சோயிப் அக்தர் பேட்டி!
கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகியது ஏன்? சோயிப் அக்தர் பேட்டி!

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோஹ்லி விலகினார். இவரது இந்த முடிவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது விராட் கோஹ்லி கேப்டன் பதவியில் இருந்து தானாக விலகியது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பேட்டியளித்துள்ளார்.

சோயிப் அக்தர் பேட்டி:

விராட் கோஹ்லி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச T20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதை தொடர்ந்து ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். விராட் கோஹ்லி ஒயிட் பால் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். நேற்று முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் 2 போட்டிகளில் அரைசதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.

அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் !

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதையடுத்து அடுத்த கேப்டன் யார் என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளின் அடுத்த கேப்டனுக்கான பட்டியலில் பல்வேறு வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இது குறித்து BCCI ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்து அடுத்த டெஸ்ட் அணி கேப்டன் நியமிக்கப்படும் என்று BCCI தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து வடிவங்களிலும் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோஹ்லி விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள்!

விராட் கோஹ்லியின் இந்த திடீர் முடிவு குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பேட்டியளித்துள்ளார். அதில் விராட் கேப்டன் பதவியில் இருந்து தானாக விட்டு செல்லவில்லை என்றும் அவர் பதவி விலக கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் தெரிவித்தார். கோஹ்லி ஒரு சிறந்த மனிதர், சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சாதனையை படைத்துள்ளார் என்று கூறினார். மேலும் எல்லா கசப்புணர்வுகளையும் மறந்துவிட்டு விராட் கோஹ்லி நீண்ட காலம் விளையாட வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here