அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் !

0
அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு - புதிய வழிகாட்டுதல்கள் !
அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு - புதிய வழிகாட்டுதல்கள் !
அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் !

அண்ணாபல்கலைகழகம் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., உள்ளிட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை எழுத தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வு:

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து தினசரி 4 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் மீண்டும் வெளியிடங்களுக்கு செல்ல தொடங்கினர். இந்த நேரத்தில் பரவி வரும் ஓமிக்ரான் அச்சுறுத்ததால் அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள்!

அதனால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கல்லூரிகள் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக வெகு நாட்களாக மூடப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் தான் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணத்தால் மீண்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதார் PVC கார்டு – ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

அதனால் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வானது பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் முதல் வாரம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

 • கூகுள் கிளாஸ் ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 • விடைத்தாள்களை மாணவர்கள் அஞ்சல், கொரியர் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
 • விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாட பெயர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும்.

  Velaivaippu Seithigal 2022

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here