ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
Rashtriya Chemicals and Fertilizers Limited-ல் (RCFL) ஏற்பட்டுள்ள Management Trainee பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு பட்டம் பெற்ற தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (18.08.2022) முடிவடைய உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
RCFL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Management Trainee (Chemical, Mechanical, Boiler, Safety, Civil, Fire, CC Lab, IT) பணிக்கு என 33 பணியிடங்கள் RCFL நிறுவனத்தில் காலியாக உள்ளது.
- இப்பணிக்கு UGC / AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, Master Degree, Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- 01.03.2022 அன்றைய தினத்தின் படி, Management Trainee (CC Lab) பணிக்கு அதிகபட்சம் 32 வயது எனவும் மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 27 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பயிற்சியின் போது ரூ.30,000/- என்றும், பயிற்சிக்கு பின் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் Personal Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD / Female ஆகியவர்களை தவிர மற்ற அனைவரிடமும் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
RCFL விண்ணப்பிக்கும் விதம்:
இந்த RCFL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் www.RCFLltd.com என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளையுடன் (18.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்