RBI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. விலைவாசி குறைய போகுது – முழு விவரம் இதோ!

0
RBI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. விலைவாசி குறைய போகுது - முழு விவரம் இதோ!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சில்லறை பணவீக்கம் 5.09% ஆக இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெளியான அறிவிப்பு

கடந்த ஆண்டு சில்லறை பணவீக்கம் அதிகரித்த நிலையில், விலைவாசிகளும் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின் படி, பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் குறைந்து இருக்கிறது. அதாவது நான்கு மாதங்களில் இல்லாத அளவு 5.09% ஆக குறைந்துள்ளது. இது தொடர்ச்சியாக ஆறாவது மாதமாகும். ஆறாவது மாதமாக பணவீக்கம்  இரண்டு முதல் 6% வரை இருக்கிறது.

மேலும் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் தற்போதும் உணவு பொருட்களின் விலை உயர்வாக இருந்தாலும், நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் ஜனவரி மாதம் பணவீக்கம் 5.1% ஆக இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள், பருப்பு வகைகள் மற்றும் அதன் தயாரிப்புகளின் பணவீக்கம் சரிந்தாலும், தானியங்கள் மற்றும் அதன் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் பால் மற்றும் அதன் தயாரிப்புப் பிரிவுகளின் விலை உயர்வாகவே இருக்கிறது. இருந்தாலும் மத்திய வங்கி 2023-24ல் பணவீக்கம் 5.4% ஆகவும், ஜனவரி-மார்ச் காலாண்டில் 5.0% ஆகவும் இருக்கும் என ஏற்கனவே கணித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!