‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை காவ்யா vs ‘செம்பருத்தி’ பார்வதி ஷபானா – வெற்றி பெற்றது யார்?

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை காவ்யா vs 'செம்பருத்தி' பார்வதி ஷபானா - வெற்றி பெற்றது யார்?
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை காவ்யா vs 'செம்பருத்தி' பார்வதி ஷபானா - வெற்றி பெற்றது யார்?
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை காவ்யா vs ‘செம்பருத்தி’ பார்வதி ஷபானா – வெற்றி பெற்றது யார்?

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் நடிக்கும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நடிகைகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

சிறந்த நடிகை:

ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து மக்கள் மனம் கவர்ந்த நடிகர், நடிகைகள் டாப் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி ரசிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக வயதானவர்கள் தான் சீரியல் பார்க்க வேண்டும் என்ற நிலை மாறி இளசுகளையும் சீரியல் பார்க்கும் அளவிற்கு அழகான நடிகைகள் களமிறங்கி இருக்கின்றனர். மேலும் காலமாற்றத்திற்கு ஏற்றார் போல சீரியல் கதையும் மாற்றப்பட்டு விறுவிறுப்பை அதிகரித்து வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு சிறந்த சீரியல் நடிகைகள் குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் முதல் 10 இடங்களை பிடித்த நடிகைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. அவர்களின் விவரங்கள்,

காவ்யா அறிவுமணி

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாபாத்திரத்தில் அறிமுகமான காவ்யா அறிவுமணி, தற்போது விஜே சித்ரா மறைவிற்கு பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடித்து வருகிறார். இவரின் முல்லை கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஜாக்லின்

ஜாக்லின் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பின் விஜய் டிவியில் தேன்மொழி பிஏ சீரியலில் கதாநாயகியாக கலக்கி வந்தார். இந்த சீரியல் தற்போது முடிந்துள்ள நிலையில் அவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.

ஸ்ரேயா

கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா. அவர் அதே சீரியலில் ஜோடியாக நடித்த சித்து என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் ஜீ தமிழில் ரஜினி என்ற புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார்.

ஷபானா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷபானா. அவர் தன்னுடைய அழகால் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மேலும் சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் வரும் காதல் காட்சிகளில் அதிகமான ரசிங்கர்கள் அவருக்கு இருக்கின்றனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த மீனா ஹேமா – ஆன்மீக சுற்றுலா!

ஜனனி

ஜனனி அசோக் குமார் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்தாலும் இந்த சீரியல் தான் இவருக்கு நல்ல புகழை கொடுத்தது.

சைத்ரா ரெட்டி

ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியலில் இளம் வில்லியாக அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. அந்த சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது சன் டிவியில் கயல் என்ற புதிய சீரியலில் நடிகை சஞ்சய் உடன் அவர் நடித்து வருகிறார்.

விஜே அர்ச்சனா

விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் காமெடி வில்லியாக கலக்கி வருபவர் விஜே அர்ச்சனா. இவர் தொகுப்பாளராக இருந்த நிலையில் தற்போது அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த அழகான வில்லிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆஷா கவுடா

ஆஷா கவுடா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் நந்தா நடிக்கிறார்.

ரேஷ்மா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரேஷ்மா. அவர் அதே சீரியலில் அவருடன் ஒன்றாக நடித்த மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சீரியலில் தற்போது முடிவடைந்த நிலையில் கலர்ஸ் சேனலில் அபி டெய்லர் சீரியலில் கணவன் மனைவி ஜோடியாக நடித்து வருகின்றனர்.

ரவீனா

விஜய் டிவி மௌன ராகம் சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீனா. குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களில் நடித்து பல ரசிகர் கூட்டத்தையே தன் வசம் வைத்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!