‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ!

0
'பாரதி கண்ணம்மா' நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் உற்சாக நடனம் - வைரலாகும் வீடியோ!
'பாரதி கண்ணம்மா' நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் உற்சாக நடனம் - வைரலாகும் வீடியோ!
‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ!

தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தனது படப்பிடிப்பை உற்சாகமாக கழித்து வரும் நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் வெளியான இவரது வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ரோஷினி

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து சமீபத்தில் இத்தொடரில் இருந்து விலகிய நடிகை ரோஷினி தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். வழக்கம் போல ஒவ்வொரு சின்னத்திரை சீரியலில் கிடைக்கும் வரவேற்புகளை தொடர்ந்து நடிகர், நடிகைகள் பலரும் சினிமா பக்கம் தங்களது கவனங்களை திருப்புவது வழக்கம். அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த சீரியலை விட்டு விலகினார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த மீனா ஹேமா – ஆன்மீக சுற்றுலா!

சின்னத்திரையில் புதுமுக நடிகையாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிமுகமான இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்புகள் கிடைத்து வந்தது. இதை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாக சினிமா மற்றும் வெப் தொடருக்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வந்திருக்கிறது. என்றாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்காக இவை அனைத்தையும் தவிர்த்து வந்த நடிகை ரோஷினி தற்போது சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்கிற முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். என்றாலும் இந்த முடிவை வரவேற்ற ரசிகர்கள் அவரது எதிர்கால வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியாவிடம் பிரச்சனையை சொன்ன இனியா, தற்கொலைக்கு முயற்சி செய்த நிகிலா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இதற்கிடையில் நடிகை ரோஷினி எந்த திரைப்படத்தில் நடிக்கிறார், திரைப்படத்தில் தான் நடிக்கிறாரா என்று எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் ரோஷினி அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆங்கில பாடல் ஒன்றுக்கு உற்சாகமாக நடனமாடுவதை போல ஒரு வீடியோவை நடிகை ரோஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட இந்த வீடியோவும் வழக்கம் போல வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!