சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியல் – 3வது இடம் பிடித்த இந்திய அணி! ரசிகர்கள் உற்சாகம்!

0
சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியல் - 3வது இடம் பிடித்த இந்திய அணி! ரசிகர்கள் உற்சாகம்!
சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியல் - 3வது இடம் பிடித்த இந்திய அணி! ரசிகர்கள் உற்சாகம்!
சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியல் – 3வது இடம் பிடித்த இந்திய அணி! ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய ஆடவர் ஹாக்கி அணி சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மன்ப்ரீட் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி கடந்த போட்டிகளில் தொடர் வெற்றியை கண்டது. அவ்வெற்றியினால் 3வது இடத்தை பிடித்துள்ளது.

3வது இடம் பிடித்த இந்திய அணி:

எப்.ஐ.எச் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஹாக்கி போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பின்தங்கிருந்த இந்திய அணி தற்போது 3வது இடத்தை பிடித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளிலும் , ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிகளிலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவ்வாறு முழு திறமையை வெளிப்படுத்திய வீரர்களால் இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது. இதனால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

டிச.25 முதல் ஜன.2 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட தடை – மாநில அரசு உத்தரவு!

உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், பெல்ஜியம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதில் இந்திய ஆண்கள் அணி 2296.038 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா 2642.258 புள்ளிகளும் பெல்ஜியம் 2632.121 புள்ளிகளும் பெற்று நீடித்து வருகிறது.

பெண்களுக்கான தரவரிசையில் இந்திய ஹாக்கி அணி 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி 1810.321 புள்ளிகள் பெற்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்ற இந்திய அணி 4வது இடத்தை பிடித்தது. நெதர்லாந்து அணி 3015.356 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆண்கள் பிரிவில் இந்திய ஹாக்கி அணி 3வது இடம் பிடித்ததால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மன்ப்ரீட் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி கடந்த போட்டிகளில் தொடர் வெற்றியை கண்டது. அவ்வெற்றியினால் 3வது இடத்தை பிடித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!