ராமநாதபுரம் ஊர்க்காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
ராமநாதபுரம் ஊர்க்காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

ராமநாதபுரம் ஊர்க்காவல் படை ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கடலோர பாதுகாவலர் (Coast Guard / Home Guard Force) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 11.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Ramnad Coast Guard
பணியின் பெயர் Coast Guard / Home Guard Force
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

ஊர்க்காவல் படை காலிப்பணியிடங்கள்:

ராமநாதபுரம் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள கடலோர பாதுகாவலர் (Coast Guard / Home Guard Force) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலோர பாதுகாவலர் கல்வி தகுதி:

கடலோர பாதுகாவலர் (Coast Guard / Home Guard Force) பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கடலோர பாதுகாவலர் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

கடலோர பாதுகாவலர் ஊதியம்:

இந்த ராமநாதபுரம் ஊர்க்காவல் படை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

ஊர்க்காவல் படை தேர்வு முறை:

கடலோர பாதுகாவலர் (Coast Guard / Home Guard Force) பணிக்கு தகுதியான நபர்கள் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ள நேர்காணல், உடற்தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊர்க்காவல் படை விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 05.02.2024 அன்று முதல் 11.02.2024 அன்று வரை ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!