ரயில்வே பணியிட தேர்வில் முறைகேடு !! – குளறுபடி என சந்தேகம்

0
ரயில்வே பணியிட தேர்வில் முறைகேடு
ரயில்வே பணியிட தேர்வில் முறைகேடு

ரயில்வே பணியிட தேர்வில் முறைகேடு !! – குளறுபடி என சந்தேகம்

தெற்கு ரயில்வேயில் சரக்கு கார்டு பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட பொதுவான போட்டித்தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 91 இடங்களில் வடமாநில தேர்வர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இது தமிழர்களுக்கு எதிரான விரோத போக்கு என்று என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரயில்வேயில் உள்ள கடைநிலை ஊழியர்கள் பணியிடங்களுக்கு இவ்வாறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கேற்ப பத்தி மற்றும் உயர்வு வழங்கப்படும். மொத்தம் 5000 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதில் 2800 தேர்வர்கள் தமிழர்கள். மொத்தம் 96 ரயில் கார்ட் பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது.

அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த தேர்வு முடிவுகள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ரயில்வே சார்பில் இருந்து தேர்வு எழுதிய தேர்வர்களின் பலர் ஏற்கனவே போட்டி தேர்வினை எதிர்கொண்டவர்கள் என்பதனாலும் தமிழக தேர்வர்கள் போதிய அனுபவமின்றி கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை ஏற்றக்கொள்ள முடியாது எனவும் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!