மன்னிப்பு கேட்கும் சரவணன், ஏற்றுக் கொள்வாரா சிவகாமி? இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
மன்னிப்பு கேட்கும் சரவணன், ஏற்றுக் கொள்வாரா சிவகாமி? இன்றைய
மன்னிப்பு கேட்கும் சரவணன், ஏற்றுக் கொள்வாரா சிவகாமி? இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
மன்னிப்பு கேட்கும் சரவணன், ஏற்றுக் கொள்வாரா சிவகாமி? இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” எபிசோடில், சந்தியாவும் சரவணனும் எல்லா பிரச்சனைகளையும் முடிந்து சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால் சிவகாமி இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் கிளம்பி கொண்டிருக்கிறார். அதை சந்தியா பார்த்து ரசிக்க, எதற்கு என்னை இப்படி பார்க்கிறீங்க என சொல்கிறார். உடனே சந்தியா ஏன் இந்த சட்டை போட்டுருக்கீங்க என கேட்க, இதான் மேலே இருந்தது என சொல்ல சந்தியா வேற சட்டை எடுத்து கொடுக்கிறார். பின் சரவணனும் சந்தியாவும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை பற்றி சிவகாமியிடம் சொல்லிவிட வேண்டும் என முடிவு செய்கின்றனர்.

மறுபக்கம் சிவகாமி மீது எல்லா பிரச்சனையும் என் மீது சொல்லி சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப என்ன காரணம் இருக்கும் என புரியாமல் இருக்கிறார். அப்போது சரவணனின் அப்பா என்ன நடந்தது என விளக்கமாக சொல்கிறார். அப்போது சிவகாமி இவ்வளவு விஷயம் நடந்திருக்கு என்னிடம் எதுவும் சொல்லாமல் என் மீது பழி போட்டு இப்படி செய்ய என்ன காரணம் என கேட்கிறார். நீ இப்படி தான் எல்லாம் செய்திருப்ப அதான் உன்னிடம் எதுவும் சொல்லவில்லை என சொல்ல, நான் சென்று அவனிடம் கேட்கிறேன் என கிளம்புகிறார்.

பண கஷ்டத்தில் இருக்கும் கோபி, சமையல் ஆர்டர் செய்ய முடிவு எடுக்கும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

பின் பார்வதி பாஸ்கருக்கு போன் செய்கிறார். அப்போது பாஸ்கர் உன் அண்ணன் அண்ணி வந்துவிட்டார்களா என கேட்கிறார். நல்லபடியாக வந்துட்டாங்க என சொல்ல, சரி அப்பறம் ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கிறது என சொல்ல, திருமணம் ஒரு வருடம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என சொன்னதால் தான என கேட்கிறார். நாம் இருவரும் 1 வருடம் நன்றாக காதலிக்கலாம் என சொல்ல, அம்மா திட்டுவார் என பார்வதி சொல்கிறார். ஆமாம் காதலருடன் சுற்றினால் உன் அம்மா எதுவும் சொல்லமாட்டாங்களா என கேட்கிறார்.

அது என் காதலர் இல்லை என் கடையில் வேலை பார்க்கும் பையன் என சொல்ல, அதான் எனக்கு எல்லாம் தெரியுமே என பாஸ்கர் சொல்கிறார் அதான் உன்னை மீண்டும் தேடி வந்தேன் என சந்தோசமாக பேசி போனை வைக்கிறார். பின் சிவகாமி சண்டை போட தயாராக இருக்க சரவணனும் பேச வருகிறார். வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து பேச, இது போல சந்தியாவிற்கு இந்த வீட்டில் நிம்மதி இல்லை அதான் நான் அவரை வெறுப்பது போல நடித்தேன் என சொல்கிறார்.

கண்ணம்மாவுடம் சேர்ந்து வாழ விரும்பும் பாரதி, தடுக்க நினைக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

உடனே சிவகாமி, சந்தியா மீது பாசத்தால் இப்படி பொய் சொல்லி நடிப்பியா என சொல்லி சிவகாமி சண்டை போடுகிறார். சரவணன் நான் செய்தது தப்பு தான் என சொல்லி மன்னிப்பு கேட்கிறார். ஆனால் நீயே வந்து சொன்னால் எல்லாம் சரியாகி விடுமா என கேட்க, இந்த தடவை நான் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை என சொல்கிறார். கல்யாணத்திற்கு முன்னால் எப்படி இருந்த இப்போ இப்படி மாறிவிட்ட என சொல்லி வருத்தப்படுகிறார்.

கட்டுன பொண்டாட்டிக்காக பெத்த அம்மாவை கூட ஏமாற்றுவியா என சொல்லி பிரச்சனை செய்கிறார். சரவணனும் எவ்வளவோ மன்னிப்பு கேட்க சிவகாமி கேட்பதாக இல்லை. இதற்கு மேல் என்ன சொல்லி நான் புரிய வைப்பேன் என எனக்கு தெரியவில்லை என சொல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். சந்தியா பேச வந்ததும், சிவகாமி நீ பேசாதே என சொல்கிறார். சரவணன் மாதிரி ஒருவன் உனக்கு புருஷனா கிடைப்பானா, ஆனால் நீ அவனை சந்தோசமாக வைத்துக் கொள்ளவில்லை என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here