இனி ‘ராஜா ராணி’ 2 சீரியலில் சந்தியாவாக சவால்களை சந்திக்கும் செம்பருத்தி ஷபானா? ப்ரோமோ ரிலீஸ்!

0
இனி 'ராஜா ராணி' 2 சீரியலில் சந்தியாவாக சவால்களை சந்திக்கும் செம்பருத்தி ஷபானா? ப்ரோமோ ரிலீஸ்!
இனி 'ராஜா ராணி' 2 சீரியலில் சந்தியாவாக சவால்களை சந்திக்கும் செம்பருத்தி ஷபானா? ப்ரோமோ ரிலீஸ்!
இனி ‘ராஜா ராணி’ 2 சீரியலில் சந்தியாவாக சவால்களை சந்திக்கும் செம்பருத்தி ஷபானா? ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவுக்கு ஏற்படும் சவால்களை ‘செம்பருத்தி’ ஷபானா எப்படி சந்திக்கப் போகிறார் என்பது குறித்த ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

செம்பருத்தி ஷபானா

விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ஒரு முக்கியமான சீரியல் ‘ராஜா ராணி 2’. ஹிந்தி மொழியில் ‘தியா அவுர் பாத்தி ஹம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கும் சீரியலின், தமிழ் பதிப்பு தான் இந்த ‘ராஜா ராணி 2’ சீரியல். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகை ஆலியா மானசா இந்த 2வது சீசனிலும் சந்தியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘திருமணம்’ சீரியல் நடிகர் சித்து நடித்து வருகிறார்.

“குக் வித் கோமாளி 3” முதல் வாரத்தில் ரோஷினிக்கு வந்த கோமாளி – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

இத்தொடர் படிக்காத சரவணனை, படித்து போலீஸ் அதிகாரியாக சாதிக்க நினைக்கும் சந்தியா என்பவர் திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணம் சந்தியா வாழ்க்கையில் ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்த, அந்த சவால்களை எல்லாம் சமாளித்து அவர் எப்படி IPS ஆகிறார் என்பது குறித்த கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது ‘ராஜா ராணி 2’ சீரியல். இப்படி இருக்க இந்த சீரியலில் நடிகை ஆலியா மானசா நடித்து வரும் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா நடிக்க இருப்பதாக சில ப்ரோமோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து ஓய்வெடுத்து ஷாப்பிங் சென்ற மீனா – வைரலாகும் வீடியோ!

இது தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சந்தியாவின் வாழ்க்கையை புரட்டி போடும் பேரதிர்ச்சி, சந்தியா சந்திக்கப் போகும் சவால்கள் என்ற வசனத்துடன் சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா நடிக்க இருப்பதை போல சில எடிட் செய்யப்பட்ட காட்சிகள் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் நடிகை ஆலியா மானசா ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வரும் நிலையில், இவருக்கு பதிலாக செம்பருத்தி ஷபானா சந்தியாவாக நடிக்க இருப்பதை போல வெளியான இந்த ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!