“குக் வித் கோமாளி 3” முதல் வாரத்தில் ரோஷினிக்கு வந்த கோமாளி – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் களமிறங்கி இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினிக்கு முதல் வார கோமாளியாக வந்தவர் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
குக் வித் கோமாளி 3 ப்ரோமோ
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் பிரம்மாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. முதல் இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது சீசனிற்கு மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பாரதி கண்ணம்மா ரோஷினி, அம்மு அபிராமி, வித்யூலேகா, மனோ பாலா என பல பிரபலங்கள் களமிறங்கி இருக்கின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து ஓய்வெடுத்து ஷாப்பிங் சென்ற மீனா – வைரலாகும் வீடியோ!
கோமாளியாக குரேஷி, பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா ஆகியோர் இருக்கின்றனர். முதல் வார டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் பாரதி கண்ணம்மா ரோஷினி மீதே மக்களின் பார்வை இருக்கிறது. அவருக்கு கோமாளியாக யார் வருவார். அவரை தொல்லை செய்ய இருக்கிறார் என ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், முதல் வாரத்தில் குரேஷி கோமாளியாக வந்து தொல்லை செய்ய இருக்கிறார். அதில் ரோஷினி தக்காளியை கீழே போடுகிறார்.
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்!
குரேஷி நான் வேற தக்காளி எடுத்து தருகிறேன் என சொல்லி அடுப்பில் இருந்த தக்காளியை எடுக்க பார்க்கிறார். ஆனால் அது சூடாக இருந்ததால் கை சுட்டு விடுகிறது. அதை பார்த்து சிரித்துக் கொண்டே ரோஷினி ஆறுதல் சொல்ல, அது பற்றிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினியை மிஸ் செய்த ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமைந்துள்ளது.