விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – சரியும் TRP! காரணம் இதுதான்!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் - சரியும் TRP! காரணம் இதுதான்!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் - சரியும் TRP! காரணம் இதுதான்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – சரியும் TRP! காரணம் இதுதான்!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பலவித காதல் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் TRP ரேட்டிங் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ராஜா ராணி 2 சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் என் கணவன் என் தோழன் என்ற ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமேக்தான் ராஜா ராணி 2 சீரியல். இந்த சீரியலில் தற்போது பார்வதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பாஸ்கர் பற்றிய உண்மைகளை ஆதியிடம் பார்வதி மறைத்துள்ளார். அவருக்கு சந்தியா மற்றும் சரவணன் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் உதவுகின்றனர். இது ஒருபுறம் இருக்க சந்தியா மற்றும் சரவணன் இருவரும் தற்போதுதான் அன்பாக நடந்து கொள்கின்றனர்.

செழியன் & ஜெனியை சேர்த்து வைக்கும் பாக்கியா – பலவித திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!

சரவணனுக்கு வண்டி ஓட்டவும் கற்றுக்கொடுக்கிறார். இப்படியாக இருந்தாலும் இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து சரிந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் முன்னிலையில் இருந்து வந்த முக்கியமான சீரியலாக ராஜா ராணி 2 சீரியல் இருந்து வந்தது. ஆனால் தொடர்ச்சியாக அதே கதைக்களத்துடன் சுற்றி வருவதால் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் குறைந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ முதல் எலிமினேஷனில் வெளியேறிய நாடியா சாங் – கதை முழுவதும் பொய்யா?

விஜய் தொலைக்காட்சி சீரியல்களைப் பொறுத்தவரை தொடர்ந்து நான்காம் இடத்தில் இந்த சீரியல் இருந்தாலும் அனைத்து தமிழ் சீரியல்களில் மத்தியில் இது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. டிஆர்பி புள்ளிகள் அதிகமாக இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங் பட்டியலில் ராஜா ராணி 2 சீரியல் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. இதனால் சீரியலில் அடுத்து ஏதாவது ஒரு பெரிய ட்விஸ்ட் கொடுத்தால் தான் சீரியல் டிஆர்பி உயரும் என்றும் நம்பப்படுகிறது. அடுத்து வரும் நாட்களிலும் இதே போல சந்தியா சரவணனின் காதல் காட்சிகள் ஒளிபரப்பப்படுமா? அல்லது ஏதேனும் திருப்பம் சீரியலில் வருமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!