
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.. அதுவும் இந்த நகரங்களில்- வானிலை அலர்ட்!
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மிதமான மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில், மேலும், அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே ஈரமான வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செப்டம்பர் 30-ம் தேதியான இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல், அக்டோபர் 1, 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. மாநிலத்தலைநகர் சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய தகவல் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் சூறாவளி காற்று வரும் நாட்களில் வீசும் என்றும், இதனால் மீனவர்கள் இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் தெளிவாக கணிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையாக செல்லும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்