தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய தகவல் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

0
தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய தகவல் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய தகவல் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய தகவல் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 2022 – 2023-ம் கல்வியாண்டிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எப்போது வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

பொறியியல் கல்லூரி:

தமிழகத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி அன்று 10,12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. மொத்தமுள்ள 420 பொறியியல் கல்லூரிகளில் 1.5 லட்சம் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதி, தரமான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் உள்பட சிறப்புப் பிரிவினர்கள் பங்கேற்றனர். அடுத்த கட்டமாக பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு செப். 25ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்க 35,118 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 25,138 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் 24,163 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வேளாண் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியீடு – விரைவில் கலந்தாய்வு!

இந்த நிலையில் 4-ஆம் சுற்று கலந்தாய்வுகள் நடைபெற்று முடிந்தவுடன் பொறியியல் மாணவர்களுக்கு அக்டோபர் இறுதியில் வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக். 13-ம் தேதி நடைபெறும் என்றும் இதுவரை கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் அக். 10-ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!