பஞ்சாப் நேஷனல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஜனவரி 3 விண்ணப்பிக்க கடைசி தேதி!

0
பஞ்சாப் நேஷனல் வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஜனவரி 3 விண்ணப்பிக்க கடைசி தேதி!
பஞ்சாப் நேஷனல் வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஜனவரி 3 விண்ணப்பிக்க கடைசி தேதி!
பஞ்சாப் நேஷனல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஜனவரி 3 விண்ணப்பிக்க கடைசி தேதி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளுக்கு பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலையின் முழு விவரம்:

தமிழகத்தின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் வேலையின்றி அவதிப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் அதிகமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகுகிறது. அந்த வகையில் தற்போது திருச்சி வட்டாரத்திலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளுக்கு பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் சேர்க்கைக்கான (ஊதிய அளவு 1/3 புள்ளிகள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலையின் விவரம்:

 • நிறுவனத்தின் பெயர்: பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)
 • பணியின் பெயர்: துப்புரவு பணியாளர்
 • பணியின் வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு
 • மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை: 37 காலிப்பணியிடங்கள் (அரியலூர் 02, கடலூர் 02, தருமபுரி 02, கிருஷ்ணகிரி 01 ,மயிலாடுதுறை 03, நாகப்பட்டினம் 03 நாமக்கல் 03, பெரம்பலூர் 01, சேலம் 04, தஞ்சாவூர் 03, திருவாரூர் 01, திருச்சி 12)
 • பணியிடம்: தமிழ்நாடு
 • விண்ணப்பதாரரின் வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18. அதிக பட்ச வயது 24.
 • விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் முறை: Test/ Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி: குறைந்தபட்ச தகுதி கிடையாது. அதிகபட்சமாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் கூடாது. கல்வி பயிலாதவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
 • பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2022
 • விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் அவரவர் சொந்த ஊரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்று ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை
 • விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேல் பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் சேர்க்கைக்கான தேர்வு 2021-2022. எந்த மாவட்டம் என தெளிவாக குறிப்பிட்டு , அனுப்புனர் , விலாசத்துடன் முதன்மை மேலாளர், மனிதவள மேம்பாட்டுத் துறை , வட்டார அலுவலகம் , பிஎன்பி ஹவுஸ் திருச்சி, தஞ்சாவூர் சாலை கைலாசபுரம், திருச்சி 620014 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஜனவரி 3 2022 வரை மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!