விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் புகழ் என்ட்ரி எப்போது? வித்யூலேகா சொன்ன விளக்கம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி சீசன் 3" நிகழ்ச்சியில் புகழ் என்ட்ரி எப்போது? வித்யூலேகா சொன்ன விளக்கம்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் புகழ் என்ட்ரி எப்போது? வித்யூலேகா சொன்ன விளக்கம்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நடிகை வித்யூலேகா புகழ் எப்போது வருவார் என வெளிப்படையாக லைவில் பதில் அளித்து இருக்கிறார்.

நடிகர் புகழ்:

குக் வித் கோமாளி பல குடும்ப ரசிகர்களை கொண்ட ஒரு நகைசுவை சமையல் நிகழ்ச்சி ஆகும். இதுவரை இரண்டு சீசன்களும் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் மூன்றாவது சீசன் இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் 10 போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். மேலும் கடந்த சீசன்களில் கலக்கிய மணி மேகலை, பாலா, சுனிதா, ஷிவாங்கி ஆகியோர் கோமாளிகளாக இந்த சீசனும் வந்துள்ளனர். அவர்கள் கோமாளிகளுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் சிரிப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

பாரதி பற்றிய உண்மையை லட்சுமியிடம் சொல்லப்போகும் கண்ணம்மா – சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

என்ன தான் இருந்தாலும் ரசிகர்களின் புகழ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என வருத்தத்துடன் இருக்கின்றனர். புகழ் இரண்டு சீசன்களில் வந்த நிலையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதனால் அவர் மூன்றாவது சீசனில் வரவில்லை. எதாவது சிறப்பு எபிசோடுகளில் அவர் வருவார் என தகவல் வெளியாகி இருக்கிறது, இந்நிலையில் குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் போட்டியாளரான நடிகை வித்யூலேகா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

கடையை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர், கதிரின் புதிய திட்டம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அதன் பின் லைவில் பேசிய அவர் நான் அடுத்த எபிசோடுகளில் நிச்சயம் கலந்து கொள்வேன் எனவும், டயட் ரெசிபிக்களை நான் செய்வேன் சென்ற வாரம் செய்தது கூட டயட் எபிசோட் தான் என விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும் புகழ் எப்போது வருவார் என ரசிகர்களின் கேள்விக்கு எனக்கு பிடித்த கோமாளி புகழ் தான் அவர் வர வேண்டும் என நானும் ஆவலுடன் தான் இருக்கிறேன் என விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும் அடுத்த வார எபிசோட் களைகட்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!