10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றம் மறுப்பு!

0
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றம் மறுப்பு!
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றம் மறுப்பு!
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றம் மறுப்பு!

CBSE, ICSE மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) உள்ளிட்ட பிற வாரியங்களால் நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான ஆப்லைன் போர்டு தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுவை மறுப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்வுகள் ரத்து

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா பேரலை தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது கொரோனா 3ம் அலைத்தொற்றும் ஓய்ந்திருக்கும் சூழலில் அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான பொதுத்தேர்வுகளை ஆப்லைன் முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், CBSE, ICSE மற்றும் NIOS உள்ளிட்ட பிற வாரியங்களால் நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான ஆப்லைன் போர்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளது.

சென்னை: சவரனுக்கு ரூ.864 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பான தனது கடந்த கால உத்தரவு, இந்த கல்வியாண்டுக்கும் தொடராது என்று விளக்கம் அளித்துள்ளது. அதாவது தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக சமூக ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா சஹாய் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனு, அவசர பட்டியலுக்காக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த மனுவில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இந்த ஆண்டும் அதே பிரச்சனை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு பட்டியலிடப்படும் என்று அந்த பெஞ்ச் கூறியது. அந்த வகையில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச், இதுபோன்ற மனுக்கள் தவறான நம்பிக்கையை உருவாக்குவது மட்டுமல்லாமல், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு குழப்பத்தை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனின் தலைநகர் கீவில் தாக்குதலை நடத்திய ரஷ்யா – தொடங்கியது போர்! பீதியில் மக்கள்!

கடந்த ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி, இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) மற்றும் CBSE ஆகியவற்றின் மதிப்பீட்டுத் திட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த வாரியங்கள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பிடுவதற்கான 30:30:40 சூத்திரத்தை ஏற்றுக்கொண்டது. இதன் படி தேர்வுகளும் நடத்தப்பட்டது. இப்போது CBSE 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில் CISCE மற்றும் ICSE 10ம் வகுப்பு மற்றும் ISC 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!