நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை நிராகரித்தது ஏன்?

0
நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை நிராகரித்தது ஏன்?
நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை நிராகரித்தது ஏன்?
நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை நிராகரித்தது ஏன்?

நடிகை சமந்தா தனது காதல் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், அவருக்கு நாக சைதன்யா தரப்பில் இருந்து ரூ.200 கோடி ஜீவனாம்சம் வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதை வேண்டாம் என புறக்கணித்த சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா:

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. அந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற பெயரில் உருவானது. இந்த படத்தில் நடிகை சமந்தா லீடிங் ரோலில் நடித்தார். இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் சமந்தா. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் சமந்தா.

தனத்தின் அம்மாவுடன் ஜோடி சேர்ந்த கஸ்தூரி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரீல்ஸ் வீடியோ!

தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல் இரும்புத்திரை, சீமராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதேபோல் தெலுங்கில் ஷகுந்தலம் என்ற படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவுடன் நடித்து வருகிறார்.

புது வீட்டில் குடியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி, தனம்? கண்ணன், ஐஸ்வர்யா தான் காரணமா!

இந்நிலையில் அவருக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து நேற்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. அவர் சில தினங்களுக்கு முன்பு தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால், சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக ரூ. 200 கோடி தர, நாகசைதன்யாவின் முடிவெடுத்ததாகவும், தனக்கு அந்த ரூ. 200 கோடி வேண்டாம் என்று சமந்தா கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 கோடி என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here