தனத்தின் அம்மாவுடன் ஜோடி சேர்ந்த கஸ்தூரி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரீல்ஸ் வீடியோ!

0
தனத்தின் அம்மாவுடன் ஜோடி சேர்ந்த கஸ்தூரி -
தனத்தின் அம்மாவுடன் ஜோடி சேர்ந்த கஸ்தூரி - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் ரீல்ஸ் வீடியோ!
தனத்தின் அம்மாவுடன் ஜோடி சேர்ந்த கஸ்தூரி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரீல்ஸ் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கஸ்தூரியும், தனத்தின் அம்மாவும் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியல்களின் வரிசையில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன், தம்பி மற்றும் அண்ணிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணன் தம்பிகளை பிரித்த கடைசி தம்பி கண்ணனின் காதல் லட்சுமி அம்மா உயிரை பறித்துவிட்டது. குடும்பத்தில் அனைவரும் கண்ணனை அவமானப்படுத்த ஐஸ்வர்யா தனத்தை கேள்வி கேட்கிறார். உடனே தனம் வீட்டு சாவியை கொடுத்து நீங்க சென்று அந்த வீட்டில் இருங்க நாங்க வெளியே போயிடுறோம் என சொல்கிறார்.

புது வீட்டில் குடியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி, தனம்? கண்ணன், ஐஸ்வர்யா தான் காரணமா!

பின் கஸ்தூரி தனத்தை பழி வாங்க மல்லியுடன் சேர்ந்து கொண்டு திட்டமிடுகிறார். அதன்படி கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை மூர்த்தியின் வீட்டின் எதிர் வீட்டில் தங்க வைக்கிறார். அதனால் அண்ணன் தம்பிகளுக்கு இடையே சண்டை நடக்கும் என எதிர்பார்க்கிறார். இதெல்லாம் தெரியாமல் கண்ணனும் ஐஸ்வர்யாவும் மூர்த்தி வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வருகின்றனர். அவர்களை பார்த்த மீனாவும், தனமும் அதிர்ச்சியில் நிற்கின்றனர்.

“பாக்கியலட்சுமி” சீரியல் கோபி பற்றிய சின்ன அலசல் – வீட்டில் ஹிட்லர், ஆனால் வெளியே!

இந்நிலையில் கஸ்தூரி மற்றும் தனத்தின் அம்மா, இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்து வெளியிட்டுள்ளனர். அதில் ஆளில்லா ஆத்தங்கரை என வெட்கப்பட்டுக் கொண்டே இருவரும் நடித்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் இருவரின் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here