ரயில் பயணிகள் கவனத்திற்கு – வெயிட்டிங் டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - வெயிட்டிங் டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - வெயிட்டிங் டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
ரயில் பயணிகள் கவனத்திற்கு – வெயிட்டிங் டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

இந்திய ரயில்வேயின் IRCTC ரீஃபண்ட் விதிகளின் படி, ஒருவரது ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால் அவர் காத்திருப்பு டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்ப பெற முடியும். இதற்கான முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

வெயிட்டிங் டிக்கெட்

ஒரு பாதுகாப்பான பயணம் என்று யோசிக்கும்போதெல்லாம், பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை ஒரு சிறந்த தேர்வாக எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது, வேறு மாநிலங்களுக்கு செல்வது என அனைத்து பயணங்களும் ரயில் பயணம் எளிதாக அமைகிறது. இந்த ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு பல வகையான வசதிகளும் அரசால் கொடுக்கப்படுகிறது. இதில், வசதியான இருக்கைகள், தூங்கும் வசதிகள், கேட்டரிங் வசதிகள் மற்றும் கழிப்பறைகள் ஆகியவையும் அடங்கும்.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

இப்போது தூரமாக இருக்கும் இடங்களுக்கு ரயிலில் பயணம் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதை செய்யாவிட்டால், பல நேரங்களில் மக்கள் காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் கூட பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால், காத்திருப்பு டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால் அந்த டிக்கெட்டுக்கான பணத்தையும் பயணிகள் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் விற்பனையிலிருந்து அவற்றை ரத்து செய்வது வரையிலான பல விதிகளை அமைத்துள்ளது.

அந்த வகையில், நீங்கள் காத்திருப்பு அல்லது RAC டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, எந்த காரணத்திற்காகவும் அவற்றை ரத்து செய்ய விரும்பினால் அவ்வாறு செய்யலாம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்ய முடியும். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் ரூ.60 ரத்து கட்டணமாக செலுத்த வேண்டும் அதே நேரத்தில், நீங்கள் ஏசி வகுப்பின் காத்திருப்பு டிக்கெட்டை ரத்து செய்தால், இதற்காக ரூ.65 செலுத்த வேண்டும். மீதமுள்ள பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

Exams Daily Mobile App Download

தொடர்ந்து காத்திருப்பு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், பணத்தைத் திரும்பப் பெற முதலில் அதை சரியான நேரத்தில் ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் 2 முதல் 3 நாட்களுக்குள் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், வாடிக்கையாளர் சேவையை அணுக 0755 661 0661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதே நேரத்தில், நீங்கள் கவுண்டரில் இருந்து காத்திருப்பு ரயில் டிக்கெட்டை எடுத்தால், பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் ரயில் டிக்கெட் கவுண்டருக்கு செல்ல வேண்டும். இங்கிருந்து நீங்கள் சரியான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால் பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!