ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போன் நம்பரை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போன் நம்பரை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போன் நம்பரை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போன் நம்பரை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதார் கார்டுடன் புதிய மொபைல் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. மேலும் பல்வேறு சேவைகளை பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. அதனால் அனைவரும் ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – இனி காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பள்ளிகள் திறப்பு!

அத்துடன் வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களும் தற்போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் கார்டில் ஏதெனும் மாற்ற நினைக்க வேண்டும் என்றால் அலைய வேண்டிய தேவையில்லை. இதற்கான ஆன்லைன் போர்ட்டலை UIDAI நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் தங்களுக்கு தேவையான படிவத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது. மேலும் தற்போது ஆதார் கார்டுடன் புதிய மொபைல் எண்ணை இணைக்கலாம்.

தற்போது ஆதார் கார்டுடன் புதிய மொபைல் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. முதலாவதாக UIDAIயின் ask.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் தங்களின் மொபைல் நம்பரை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். இப்போது ஆன்லைன் ஆதார் சர்விஸ் செக்ஷனிலிருந்து இருந்து மொபைல் நம்பர் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. இப்போது தங்களின் விவரங்களை உள்ளிட வேண்டும். அதன் பின் கேப்ட்சா குறியீட்டை கொடுக்க வேண்டும்.

4. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

5. இறுதியாக “OTP” எண்ணை உள்ளிட்டு “சேவ் அண்ட் ப்ரொசீட்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here