வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் – வழி முறைகள் இதோ!

0
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் - வழி முறைகள் இதோ!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் - வழி முறைகள் இதோ!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் – வழி முறைகள் இதோ!

தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று ஒரு மசோதா நிறைவேற்றபட்டது. அதற்கு ஆன்லைன் அல்லது எஸ்எம்எஸ் அல்லது போன் கால் மூலமாக விண்ணப்பிக்க முடியும். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்

வாக்காளர் அடையாள அட்டை

இந்தியாவில் வாக்காளர்களாக பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களின் 12 இலக்க ஆதார் எண்ணை கேட்டு அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி கொள்ளலாம் என்று தேர்தல் பதிவு அலுவலர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இம்மசோதா நடப்பாண்டில் தான் அறிமுகப்படுத்தபட்டது. இந்த புதிய மசோதாவானது வாக்காளர் பட்டியலில் உள்ள டூப்ளிகேட்களை தவிர்க்க அல்லது ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்களை அடையாளம் காண உதவுகிறது. மேலும் இம்மசோதாவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் 12 இலக்க ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் இம்மசோதா கூறுகிறது.

தமிழகத்தில் வங்கிகளுக்கு ஜனவரி மாதம் 10 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது பற்றி விரிவாக பார்க்கலாம். SMS APP மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்கலாம். முதலில் SMS APP-ஐ OPEN செய்து கொள்ள வேண்டும். அதன் பின் புதிய மெசேஜ்-க்கு சென்று டைப் செய்ய வேண்டும். இந்த மெசேஜ்-யை 51969 அல்லது 166 என்ற நம்பருக்கு அனுப்ப வேண்டும். அடுத்ததாக போன் கால் மூலமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்கலாம். இதற்கு முதலில் 1950 என்ற நம்பருக்கு அழைக்க வேண்டும்.

பின்பு இதில் அறிவிக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள விவரங்களை தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்த சேவையானது வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும். தற்போது ஆன்லைன் முறையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

  • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பதற்கு https://voterportal.eci.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இதில் Login செய்ய E-mail ID, தொலைபேசி எண், வாக்காளர் அடையாள எண் மற்றும் Password போன்றவற்றை உள்ளிட வேண்டும். புதிய பயனாளராக இருந்தால் Password உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை – மாணவர்கள் மகிழ்ச்சி!

  • அதன் பின் Login கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள மாவட்டம் மற்றும் மாநிலத்தின் தகவல்களை உள்ளிட வேண்டும். அதையடுத்து பயனாளர் பெயர், தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை உள்ளிட்ட வேண்டும்.
  • இதையடுத்து Search பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் அரசின் டேட்டாபேஸில் உள்ள அனைத்து விவரங்களும் காண்பிக்கப்படும்.அதன் பின் Feed Aadhaar No என்பதை கிளிக் செய்ய வேண்டும். தற்போது ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், பதிவு செய்யப்பட்ட இமெயில் அட்ரஸ் அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும்.
  • கடைசியாக Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!