ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!

0
ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கார்டு மூலம் நியாயவிலை பொருட்கள் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய ரேஷன் அட்டையில் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விபரங்களும் இடப்பெற்றிருக்கும்.

புதிய நபரை சேர்த்தல்:

இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நியாயவிலை பொருட்கள் வழங்கும் வகையில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கார்டு நியாயவிலை பொருட்கள் வழங்குவதற்கு மட்டுமல்லாது அனைத்து அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக கருதப்பட்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும். நாடு முழுவதும் ரேஷன் அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

TNPSC ரூ.37,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் யாருடைய பெயராவது இல்லாமல் இருந்தால் அதனை உடனடியாக சேர்க்க வேண்டும். அதேபோல் வேறு ஒருவரது பெயர் இடப்பெற்றிருந்தால் அதனை நீக்கம் செய்ய வேண்டும். இதனை செய்ய முன்பு தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் இப்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்தியேகமாக இணையதள முகவரி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வீட்டிலிருந்தே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். அதன்படி ரேஷன் அட்டையில் புதிய பெயர் சேர்ப்பது குறித்த விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

மதுரையில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதாவது புதிய பெயர் என்றால் குழந்தையின் பெயர் அல்லது திருமணமாகி புதிதாக ஒரு பெண் வந்தால் அவரது பெயர் இணைக்க வேண்டும். இதனை செய்ய முதலில் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். ஏனெனில் அவரது ஆதார் அட்டையில் தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரும், முகவரியும் மாற்றம் செய்ய வேண்டும். குழந்தையின் பெயரை சேர்க்க தந்தையின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு ஆதார் அட்டை புதுப்பிக்கப்பட்ட பின்னர் ஆதார் அட்டை நகலுடன் உணவுத்துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். குழந்தையின் பெயரை இணைக்க பிறப்பு சான்றிதழ் தேவைப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!