மதுரையில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
மதுரையில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை மதுரையில் ராஜீவ் காந்தி நகர், சமயநல்லுார், கோவில்பாப்பாகுடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் மின் கோளாறு மற்றும் மின் கசிவு காரணமாக பல்வேறு இடங்களில் தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் மின் இணைப்பு கம்பியில் ஏற்படும் மின் பிளவு மற்றும் மின் கசிவு ஆகியவற்றின் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் மாதந்தோறும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு – ஜனவரி 24ம் தேதி தொடக்கம்!

இதனை தொடர்ந்து நாளை மதுரையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மதுரையில் உள்ள மதுரை ராஜிவ்காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, அரவிந்த் கண் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்த வாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய்நகர், கங்கா நகர், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், தெப்பக்குளம், அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, பங்கஜம் காலனி, அனுப்பானடி, மேல அனுப்பானடி, தெப்பம் ரோடு, காமராஜர் சாலை மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர்., ரோடு, கொண்டித்தொழு, முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோயில் தெரு, சின்ன கண்மாய், பாலரெங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிசர் ரோடு, இந்திரா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1-6 தெரு, கான்பாளையம் 1,2 தெரு, பச்சரிசிக்கார தோப்பு, மைனா தெப்பம் 1 – 3 தெரு, கிருஷ்ணா புரம், தமிழன் தெரு, என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ. ரோடு, பி.பி.ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

IND VS SA : 7 ஆண்டுகளுக்கு பிறகு பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோஹ்லி – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இதையடுத்து சமயநல்லுார், கோவில்பாப்பாகுடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார் நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி, கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜன.19) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here