TNPSC ரூ.37,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC ரூ.37,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC ரூ.37,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC ரூ.37,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக தொழில்துறை துணைப் பணியில் வேதியியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு தொடங்கியுள்ளதை அடுத்து அரசு போட்டித் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு தேர்வாணையம் தேர்வு கால ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022ம் ஆண்டு 21 வகையான அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு தொழில் துறை துணைப் பணியில் வேதியியலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரையில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தொழில் மற்றும் வணிகத் துறையில் மொத்தம் 3 வேதியியலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வேதியியல் அல்லது வேதியியல் தொழில்நுட்பம் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் வேதியியல் அல்லது பகுப்பாய்வு வேதியியல் ஆராய்ச்சியில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வின் முதல் தாள் 1 மார்ச் 19ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை மற்றும் 2ம் தாள் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு – ஜனவரி 24ம் தேதி தொடக்கம்!

விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜனவரி 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.100 என மொத்தம் ரூ.250 செலுத்த வேண்டும். இப்பணிக்கு ஊதியமாக மாதம் ரூ.37,700 முதல் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோருக்கு ஜூலை 1, 2021 தேதிப்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் பட்டியலின பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!