ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரத்து செய்யப்பட்ட கார்டை ஆக்டிவேட் செய்யும் முறைகள்!

0
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரத்து செய்யப்பட்ட கார்டை ஆக்டிவேட் செய்யும் முறைகள்!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரத்து செய்யப்பட்ட கார்டை ஆக்டிவேட் செய்யும் முறைகள்!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரத்து செய்யப்பட்ட கார்டை ஆக்டிவேட் செய்யும் முறைகள்!

இந்தியாவில் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் மாதந்தோறும் சரியாக பொருட்களை வாங்கவில்லை என்றால் கார்டு ரத்து செய்யப்பட்டு விடும் இந்த நிலையில் மீண்டும் கார்டை ஆக்டிவேட் செய்யலாம். அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் மாதம் தோறும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு , எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அவர்களும் பயன்பெறும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

சாலைகளில் வாகனங்களை தனிப்பாதையில் ஓட்டவில்லையெனில் ரூ.10,000 அபராதம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

இதன் மூலம் மற்ற மாநிலங்களில் தங்கி இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாகவும், இருப்பிட சான்றாகவும் ஒப்புக் கொள்ளபடுவதால் தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ரேஷன் கார்டில் உணவு தானியங்களை வாங்கவில்லை என்றால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விடும்.

ஆறு மாதங்களாக ரேஷன் கார்டில் உணவு தானியங்கள் வாங்கவில்லை எனில் அந்த ரேஷன் அட்டைதாரருக்கு பொருட்கள் தேவையில்லை என கருதப்பட்டு கார்டு ரத்தாகி விடும். இத்தகைய நேரத்தில் AePDS என்ற இணையதளம் வாயிலாக ‘Ration Card Correction’ என்பதை தேர்தெடுத்து ரேஷன் கார்டு திருத்தம் பக்கத்தில் பிழைகள் இருந்தால் அதனை சரி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டால், ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!