அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு – நேர மேலாண்மை அவசியம்! எப்படி படிப்பது?

0
அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு - நேர மேலாண்மை அவசியம்! எப்படி படிப்பது?
அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு - நேர மேலாண்மை அவசியம்! எப்படி படிப்பது?
அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு – நேர மேலாண்மை அவசியம்! எப்படி படிப்பது?

அரசு தேர்வுகளுக்கு பெரும்பாலானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் எப்படி படிப்பது என்று குழப்பத்தில் இருப்பதும் உண்டு. எவ்வாறு நேரம் ஒதுக்கி படிப்பது என்பது குறித்த விபரங்கள் தான் இந்த பதிவு.

போட்டித் தேர்வு:

தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் தேர்வுகள் நடத்தப்பட்டது அதன் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். அரசுப் பணி என்பது சிலருக்கு நீண்ட நாள் கனவாக கூட இருக்கலாம். ஆனால் அந்த கனவை நினைவாக மாற்றுவது அவர்கள் தேர்வுக்கு தயாராகும் முறையின் அடிப்படையிலே அமைகிறது. ஏனெனில் தேர்வுக்கு தயாராகும் சிலர் போட்டித்தேர்வுக்கு எப்படி படிப்பது என்றே தெரியாமல் முயற்சி செய்து வருகின்றனர். தேர்வுக்கு தயாராகுபவர்கள் அனைவரும் நேரத்தை முறையே கையாள வேண்டும்.

TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

அதாவது நமது தினசரி வேலைகள், பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை முதலில் கணக்கிட வேண்டும். தேவையில்லாமல் செலவிடும் நேரங்களில் நமது கவனத்தை படிப்பின் மீது செலுத்தலாம். அதிலும் குறிப்பாக நாம் எந்த நேரத்தில் நல்ல மனநிலையில் சுறுசுறுப்பாக இருப்போமோ அப்போது நாம் படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் ஒரே பாடத்தை படிக்காமல் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பாடங்களுக்கு நேரத்தை வரையறை செய்து கொள்ளுதல் சிறந்தது.

மேலும் எவ்வளவு நேரம் படிப்பிற்காகச் செலவிடுகிறோம் என்பதைவிட, எவ்வளவு தெளிவாகப் படிக்கிறோம் என்பது முக்கியமானது. கொஞ்ச நேரம் படித்தாலும் மனதில் குழப்பங்கள், கவலைகள் போன்றவற்றிற்கு இடம் தராமல் முழுக் கவனத்தோடு படிக்க வேண்டும். வாரம் ஒருமுறை நம்மை நாமே சுய பரிசோதனை செய்யும் வகையில் மாதிரி தேர்வுகள் எழுதுவது சிறந்தது. அதன் மூலம் எந்தப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். மேலும் புதிதாக தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொதுஅறிவு குறித்த அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – சட்ட பணிகள் விழிப்புணர்வு வாரம் வழிகாட்டுதல்கள்!

போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் எப்படி நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதை வைத்தே அவர்களது வெற்றி பாதை நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல் எந்த நேரமும் படித்துக்கொண்டே இருந்தால் மூளை சோர்வு அடைந்துவிடும். அதற்காக நாம் சிறிது இடைவெளி விட்டு படிப்பது புத்துணர்வு அளிக்கும் வகையில் அமையும். தேர்வுக்கு தயாராகும் முன் துறையை தேர்வு செய்தல் அவசியம். அதன்பின் தேர்வு செய்த ஒரே துறையை வெற்றி இலக்காக கொண்டு செயல்படுதலும் அவசியமான ஒன்றாகும். மேலும் தேர்வுக்கு தயாராகுபவர்கள் தைரியத்தோடும், மன வலிமையுடனும் இருக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!