விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியங்கா – கோலாகல பொங்கல் கொண்டாட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியங்கா - கோலாகல பொங்கல் கொண்டாட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியங்கா - கோலாகல பொங்கல் கொண்டாட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியங்கா – கோலாகல பொங்கல் கொண்டாட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் பைனல் போட்டியாளர்களுடன் முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து இன்று பொங்கல் கொண்டாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ப்ரோமோ

மக்களின் பேராதரவுடன் சுமார் 100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி. இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் பைனல் வார போட்டிகளில் கலந்து கொண்டு வரும் ஐந்து போட்டியாளர்களுடன் முன்னாள் போட்டியாளர்களான வருண், அக்ஷரா, ஸ்ருதி, நாடியா சாங், அபிநய், சிபி உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 – முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!

இதன் மூலம் ‘பிக் பாஸ்’ வீடு பல்வேறு ஸ்வாரசியமான சம்பவங்களுடன் மீண்டும் கலகலப்பாகி உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் ஒரு கொண்டாட்டம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில், ‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து, பொங்கல் வைத்து விழாவை உற்சாகமான கொண்டாடியுள்ளனர்.

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – DNA டெஸ்ட் ரிசல்ட்! ரசிகர்கள் உற்சாகம்!

தொடர்ந்து ‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களையும் மக்களுக்கு தெரிவித்தவாறு வெளியான ப்ரோமோ கவனம் ஈர்த்து வருகிறது. இதற்கிடையில் உடல்நல பிரச்சனை காரணமாக ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் பிரியங்கா தற்போது பொங்கல் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார். அந்த வகையில் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்த பிரியங்காவை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!