விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – DNA டெஸ்ட் ரிசல்ட்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - DNA டெஸ்ட் ரிசல்ட்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - DNA டெஸ்ட் ரிசல்ட்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – DNA டெஸ்ட் ரிசல்ட்! ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது விஜய் டிவியின் பார்தி கண்ணம்மா சீரியலின் ரசிகர்கள் அனைவரும் பல நாட்களாக எதிர்பார்த்து வந்த DNA டெஸ்ட் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இதனால் இனி பாரதி என்ன செய்ய இருக்கிறார் என்று ஒரு பெரிய ட்விஸ்ட் எழுந்திருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் சந்தேகம் நாளுக்கு நாள் குறைந்து வருவது போல் ஒரு பக்கமும், அதை பாரதி ஏற்றுக் கொள்ள முடியாமல் குழம்புவது போல் ஒரு பக்கமும் காட்சிகள் வருகின்றது. தற்போது இது தொடர்பான காட்சிகள் தான் சீரியலில் அதிக அளவில் வருகின்றது. பாரதி தற்போது கண்ணம்மா வீட்டில் தான் இருந்து வருகிறார். இதனால் நாளுக்கு நாள் கண்ணம்மா மீதான மரியாதை அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் இருவரையும் சௌந்தர்யா பார்த்துக் கொள்கிறார். கண்ணம்மாவை பார்க்காமல் லட்சுமி அடிக்கடி ஏக்கத்தில் அழுகிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு? ரூ. 2 லட்சம் வரை DA நிலுவைத்தொகை!

ஆனாலும் சௌந்தர்யா சமாதானம் செய்து பார்த்துக் கொள்கிறார். வெறும் 6 நாட்கள் மட்டும் தான் கண்ணம்மா வீட்டில் இருப்பேன் என்று சொல்லிய பாரதி தற்போது அதை தாண்டியும் இருப்பதை கண்ணம்மாவால் நம்ப முடியவில்லை. நடுநடுவில் இவர்களின் வாழ்வில் முன்னதாக நடந்த நினைவுகளை நினைத்துப் பார்த்து நாட்களை கடத்தி வருகின்றனர். பாரதி தனது நண்பர் ஒருவர் நீதி காத்த அம்மன் கோவில் பற்றி கூறியதை கேட்டு அறிந்து வீட்டில் உள்ள அனைவரையும் அங்கு கூட்டி செல்கிறார். அங்கு கண்ணம்மாவும், பாரதியும் தனித்தனியாக பொங்கல் வைத்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்போது தான் ஒருவர் வந்து அருள்வாக்கு கூறி கண்ணம்மா குற்றம் செய்யாதவர் என்று கூறி விட்டு செல்கிறார்.

தமிழகத்தில் ஜன.17 முதல் முழு ஊரடங்கு அமல்? வைரலாகும் தகவல்! உண்மை நிலவரம் என்ன?

கண்ணம்மா நீங்க தான இங்க வந்து உண்மையை கண்டுபிடிக்க இருந்தீங்க.இப்போ சாமியே சொல்லியாச்சு என் மேல தப்பு இல்லைனு. இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க.எப்போ DNA டெஸ்ட் எடுக்கப்போறீங்க என்று கேட்கிறார். இதனால் பாரதி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இதனால் விரைவில் பாரதி DNA டெஸ்ட் எடுத்து அனைவர்க்கும் உண்மை தெரிந்து சீரியல் முடியவிருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவாக தான் உள்ளது. இதனால் சீரியலில் அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்து விரைவில் சீரியல் முடிந்து விடும் என்று ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here