திருச்சியில் மார்ச் 27 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!

0
திருச்சியில் மார்ச் 27 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!
திருச்சியில் மார்ச் 27 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!
திருச்சியில் மார்ச் 27 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் வருகிற மார்ச் 27ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், ஜமால் முகமது கல்லூரி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்த உள்ளது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் தமிழ்நாடு அரசு சென்ற ஜனவரி 20 ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது என்னவென்றால், தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பல துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் அதில் மொத்தம் 5831 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் கூறி இருந்தனர். இந்த தேர்வுகளுக்கு பதவிகளாக, நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய 116 பணியிடங்களும் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

இந்நிலையில் அரசு சார்பில் இளைஞர்களுக்கு பல வேலைவாய்ப்புகளை அவ்வப்போது அறிவித்து இருந்தாலும் தனியார் நிறுவனம் சார்பிலும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திருச்சி மாவட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், ஜமால் முகமது கல்லூரி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன் அமைப்பு ஆகியவை சார்பில் ஜமால் முகமது கல்லூரியில் நடக்கும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த முகாமில் கலந்து கொள்ளத் தேவையான ஆவணங்கள் மற்றும் காலியிடங்கள் குறித்த தகவல்கள், இம்முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இளநிலை, முதுநிலை தேர்ச்சி பெற்ற மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து துறை மாணவர்களும், 10ம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ படித்த அனைத்து மாணவர்களும், பங்கு பெறலாம். மேலும் ஒரு சில நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க ஆர்வமாக உள்ளனர். அதனை தொடர்ந்து இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் சுய விவரங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்க பதிவுக் கட்டணம் தேவை இல்லை என்றும், நேர்முகத் தேர்வு, துறை சார்ந்த கலந்தாய்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ள மாணவர்கள் தயாராக வரவேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். இந்த முகாம் குறித்த மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் 9944943240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!