தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு – கோவையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

0
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு - கோவையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு - கோவையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு – கோவையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

இளைஞர்கள் பலரும் வேலையில்லாமல் அல்லாடி கொண்டிருப்பதால் அவ்வப்போது அந்தந்த மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. வரும் சனிக்கிழமை கோவையில் காலை 9 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அவ்வப்போது தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தற்போது கோவை மாவட்டம் சூலூரில் அமைந்துள்ள RVS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் சதமடித்த வெயில், அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!

மேலும், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் படிப்புகள் பயின்றவர்களும் பங்கேற்கலாம். 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலைவாய்ப்பு முகாம்கள் மட்டுமன்றி பன்னாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டுதல்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பங்கள் அளித்தல், தன்னார்வ பயிலும் வட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்தல் முதலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள நினைக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம். மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ள நினைப்போர் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சுய விவரக் குறிப்பு ஆகிய நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்தான விவரங்களை அறிய விருப்பினால் [email protected] என்ற  முகவரிக்கு இ-மெயில் அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!