PF நாமினேஷன் முதல் விலைவாசி உயர்வு வரை – 2022 ஜன.1ம் தேதி வரப்போகும் 10 முக்கிய மாற்றங்கள்!

0
PF நாமினேஷன் முதல் விலைவாசி உயர்வு வரை - 2022 ஜன.1ம் தேதி வரப்போகும் 10 முக்கிய மாற்றங்கள்!
PF நாமினேஷன் முதல் விலைவாசி உயர்வு வரை – 2022 ஜன.1ம் தேதி வரப்போகும் 10 முக்கிய மாற்றங்கள்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள பல முக்கிய அறிவிப்புகளின் அடிப்படையில், 2022 ஜனவரி 1ம் தேதி முதல் நாட்டில் பல முக்கிய மாற்றங்கள் நடக்க உள்ளது. புதிய விலைவாசி உயர்வினால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

புதிய மாற்றங்கள்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிக அளவில் வணிக சந்தையை பாதித்தது. பல நிறுவனங்களும் மூடப்பட்டது. பல நிறுவனங்கள் சம்பள குறைப்பு மற்றும் பணியாளர் நீக்கம் போன்ற பல முறைகளையும் கையாண்டது. இந்நிலையில் சமீபத்தில் தான் இந்திய பொருளாதாரம் சற்று மீண்டு முன்னேறி வருகிறது. அரசும் இதனால் பல மாற்றங்களை அறிவித்து வந்தது. இந்த மாற்றங்களை சமாளிக்க வணிக நிறுவனங்கள் அதிரடியாக விலைவாசி உயர்வை அறிவித்துள்ளது. பல பொருட்களின் விலையை 8 முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்த திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்த விலை உயர்வினால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கபட வாய்ப்புகள் உள்ளது. ஜனவரி 1 முதல் ஏடிஎம் பணப் பரிமாற்றத்திற்கு முன்னதாக இருந்த கட்டணத்தை மாற்றி, இனி 1 ரூபாய் அதிகரித்து 21 ரூபாய் + வரியாக உயர்த்தி உள்ளது. பிஎப் பெரும் ஊழியர்கள், UAN உடன் ஆதார் எண்ணை கட்டாயம் டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லையெனில் ஜனவரி 1ம் தேதி முதல் அவர்களின் கணக்கில் ஊதியம் அளிக்கப்பட முடியாது. உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் முன்னதாக உணவகங்களில் இருந்து 5% வரி வசூலித்து வந்த நிலையில், இனி மொத்த உணவுக்கான விலையில் இருந்து 5 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. மேலும், டெலிவரி சார்ஜ், டிப்ஸ், பேக்கிங் சார்ஜ் போன்றவற்றிற்கு 18% வரி விதிக்க உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ரூ.2 லட்சம் வரை அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை!

ஆன்லைனில் வாகன சேவை அளித்து வந்த ஓலா, உபர் போன்ற நிறுவனங்களில் இதுவரை வரி ஏதும் விதிக்கப்படாத நிலையில், இனி 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வங்கி லாக்கர் சேவைகள் குறித்தும் இந்திய ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, வங்கி லாக்கரில் உள்ள பொருட்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதன் முழு பொறுப்பும் வங்கியை மட்டுமே சேரும். இதற்கு பதிலாக லாக்கரின் ஓராண்டு வாடகையின் 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் அளிக்க வேண்டும். ஆடைகள் மற்றும் காலணிகளுக்கு விற்பனை விலை 1000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் 5% ஆக இருந்த ஜிஎஸ்டி தற்போது 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான மற்றும் பிஎப் தொகையின் இ-நாமினேஷன் செய்வதற்கான இறுதி நாளாக டிசம்பர் 31 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!