Airtel, Jio மற்றும் Vi ரூ.999 க்கான போஸ்ட்பெய்ட் திட்டம் – முழு விவரம்!

1
Airtel, Jio மற்றும் Vi ரூ.999 க்கான போஸ்ட்பெய்ட் திட்டம் - முழு விவரம்!
Airtel, Jio மற்றும் Vi ரூ.999 க்கான போஸ்ட்பெய்ட் திட்டம் - முழு விவரம்!
Airtel, Jio மற்றும் Vi ரூ.999 க்கான போஸ்ட்பெய்ட் திட்டம் – முழு விவரம்!

ஏர்டெல் பயனர்களுக்கான சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.749 உடன் நிறுத்தியுள்ள நிலையில், தற்போது இரண்டு தனிப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் இரண்டு பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்தியாவில் மிக அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், இப்போது போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. அந்த வகைகயில் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.999 க்கான போஸ்ட்பெய்ட் திட்டம் மூன்று இணைப்புகளை வழங்குகிறது. அதாவது வழக்கமான add-on இணைப்புகள், 210 GB டேட்டாவுடன் ஸ்ட்ரீமிங் நன்மைகளுடன் அன்லிமிடெட் கால்ஸ் சேவைகளையும் அளிக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் மற்றொரு பேமிலி திட்டத்தின் விலை ரூ.1599 ஆக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு, 67,76,945 பேர் காத்திருப்பு – வெளியான தகவல்!

இது அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு வழக்கமான இணைப்புகளுடன் add-on இணைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டங்கள் மூலம் பயனர்கள் அமேசான் பிரைமில் ஒரு வருட இலவச சந்தாவையும், டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் விஐபி சந்தாவையும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் சந்தாவையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சலுகையை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, ஏர்டெல் நிறுவனம் வழக்கமான போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் கார்ப்பரேட் பயனர்களுக்கான ரூ.299 முதல் போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.599 முதல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டம் 100 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த பயன்பாடுகள் முடிந்த பின்னாக 1GB கூடுதலாக பெற்றுக்கொள்ள ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டம் 200 GB ரோல்ஓவர் டேட்டாவை அளிக்கிறது. இதனுடன் ஜியோ பயனர்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் SMS நன்மைகளுடன் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலுடன், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கான சந்தாவை வழங்குகிறது.

ஜியோவின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம் 200 GB டேட்டாவை அளிக்கிறது. அதன் பிறகு உபயோகப்படுத்தும் ஒவ்வொரு GB க்கும் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டம் 500 ஜிபி ரோல்ஓவர் டேட்டாவை கொண்டுள்ளது. மேலும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் SMS உடன் மூன்று கூடுதல் குடும்பத்திட்ட சிம் அட்டைகளை தருகிறது. தவிர ரூ.1499க்கான ஜியோ ரீசார்ஜ் திட்டம், 300 GB டேட்டாவை வழங்குகிறது. வோடாபோனின் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களை பொருத்தளவு, ரூ.649, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ 1348 வரை கிடைக்கிறது. இந்த திட்டங்கள் 80 GB, 120 GB, 200 GB டேட்டாவை வழங்குகின்றன.

TN Job “FB  Group” Join Now

இதன் கீழ் அமேசான் பிரைமில் 1 ஆண்டு இலவச சந்தா, ZEE 5 பிரீமியம் மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான சந்தா ஆகியவை கூடுதல் ஸ்ட்ரீமிங் நன்மைகளாக கொடுக்கப்படுகின்றன. இறுதியாக BSNL ன் ரூ.999 க்கான போஸ்ட்பெய்ட் திட்டம் 75 GB யில், 225 GB வரை அனுமதிக்கப்பட்ட டேட்டா ரோல்ஓவரை வழங்குகிறது. இந்த டேட்டா பேக் முடிவடைந்தவுடன் கூடுதலாக ஒரு GB பெற்றுக்கொள்ள ரூ.10.24 வசூலிக்கப்படுகிறது. மேலும் இதில் அன்லிமிடெட் கால்ஸ் வசதியில் தினசரி 250 நிமிடங்கள் என்ற வரம்புடன், SMS சேவைகளை அளிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. எத்தனை நாள் வேலிடிட்டி என்பதை எதிலுமே உருப்படியா சொல்லல வேலி டிடி தான் முக்கியம் எந்த செல் போன் கம்பெனி திட்டங்களுக்கு அதிக நாட்கள் வேலிடிட்டி கொடுக்குறாங்க என்பதை தான் மக்கள் பாப்பாங்க சும்மா இவ்வளவு டேட்டா அவ்வளவு டேட்டா இதெல்லாம் சரி எத்தனை நாள் வேலிடிட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!