Post Office சூப்பர் சேமிப்பு கணக்கை ஆன்லைனில் தொடங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
Post Office சூப்பர் சேமிப்பு கணக்கை ஆன்லைனில் தொடங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
Post Office சூப்பர் சேமிப்பு கணக்கை ஆன்லைனில் தொடங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
Post Office சூப்பர் சேமிப்பு கணக்கை ஆன்லைனில் தொடங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் டைம் டெபாசிட் திட்டத்தில் ஆன்லைன் முறையில் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

டைம் டெபாசிட் திட்டம்

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேமிப்பு திட்டங்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இணைகின்றனர். ஏனெனில் குறைந்த நாட்களில் அதிகமான சேமிப்பு தொகையை பெற முடிகிறது. அத்துடன் இந்திய அஞ்சல் துறை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால் ஆபத்து இல்லாத முதலீடாக உள்ளது. அதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் டைம் டெபாசிட் திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – உண்மை நிலவரம் என்ன?

இந்த திட்டம் POTD அல்லது தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் கணக்கு என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரை சேமிக்க முடியும். அதனால் ஒவ்வொரு வருடத்தை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதால் வரி விலக்கு சலுகையும் கிடைக்கிறது. மேலும் இதில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். தற்போது டைம் டெபாசிட் திட்டத்தில் கணக்கை தொடங்க ஆன்லைன் முறையில் தொடங்கலாம்.

தற்போது டைம் டெபாசிட் திட்டத்தில் கணக்கை தொடங்குவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. டைம் டெபாசிட் திட்டத்தில் கணக்கை தொடங்க முதலில் நெட் பேங்கிங் வசதி உள்ள தபால் நிலைய சேமிப்பு கணக்கை பெற்றிருக்க வேண்டும்.

2. இதனை தொடர்ந்து http://indiapost.gov.in/ என்ற  இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். இதில் அலுவலக கணக்கின் பயனர் ஐடி/கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

3. அதன் பின்னர் ‘உள்நுழை’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட்டு ‘உறுதிப்படுத்து’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. இப்போது தங்கள் கணக்கின் டாஷ்போர்டு பக்கம் திரையில் தோன்றும். அதில் ‘பொது சேவைகள்’ என்பதை கிளிக் செய்து, ‘சேவை கோரிக்கைகள்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. இதனை தொடர்ந்து ‘புதிய கோரிக்கைகள்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து இதன் கீழ் உள்ள ‘டைம் டெபாசிட் – டைம் டெபாசிட் கணக்கைத் திறக்கவும்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. இப்போது ஆன்லைன் படிவம் திரையில் காண்பிக்கப்படும். இதில் டெபாசிட் தொகை, டெபாசிட் காலம், கணக்கைத் திறக்கும் தேதி மற்றும் டெபிட் கணக்கு உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.

7. பூர்த்தி செய்த பிறகு ‘ஆன்லைனில் சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது குறிப்பு ஐடியுடன் கூடிய ஒரு ரசீது கிடைக்கும்.

8. இந்த ரசீதை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு டைம் டெபாசிட் கணக்கு தொடர்பான விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!