தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – உண்மை நிலவரம் என்ன?

0
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - உண்மை நிலவரம் என்ன?
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - உண்மை நிலவரம் என்ன?
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – உண்மை நிலவரம் என்ன?

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் படத்துடன் குடும்ப தலைவிகள் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உரிமைத்தொகை:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றாக ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த அறிவிப்பு வந்ததை அடுத்து தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் – இம்மாதம் வெளியாகும் அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இது குறித்து பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் 1000 ரூபாய் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்று பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு முதல்வர், யாரையும் ஏமாற்ற மாட்டோம் என்று தெரிவித்தார். இந்த பதில் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்த நிலையில் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் பல்வேறு பகுதிகளில் வரவேற்கப்பட்டு வருகிறது. பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வருகின்றனர்.கடை எண், குடும்பத் தலைவி பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குடும்ப அட்டை வகை, குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலியான விண்ணப்பம் தயாரித்து விநியோகம் செய்வதாகவும், இதனை தடுக்க வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!