மாதம் ரூ.6000 முதலீட்டில் ரூ.72 லட்சத்திற்கு மேல் வருமானம் – Post Office திட்டம் முழு விபரம்!

0
மாதம் ரூ.6000 முதலீட்டில் ரூ.72 லட்சத்திற்கு மேல் வருமானம் - Post Office திட்டம் முழு விபரம்!
மாதம் ரூ.6000 முதலீட்டில் ரூ.72 லட்சத்திற்கு மேல் வருமானம் - Post Office திட்டம் முழு விபரம்!
மாதம் ரூ.6000 முதலீட்டில் ரூ.72 லட்சத்திற்கு மேல் வருமானம் – Post Office திட்டம் முழு விபரம்!

மக்களுக்கு மாதம் ரூ.6000 முதலீட்டில் ரூ.72 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் திட்டம் போஸ்ட் ஆபீசில் அமலில் உள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சேமிப்பு திட்டம்:

தற்போதைய கால கட்டத்தில் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். வேலைக்கு செல்பவர்களும் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதில் சேமிப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மக்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் அரசின் ஆதரவு பெற்ற சில திட்டங்களுக்கு மட்டும் மக்கள் ஆதரவு காட்டி வருகின்றனர். அதில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸில் அமலில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது ஒரு ஓய்வூதிய திட்டமாகும்.

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு சம்பளம் – முதல்வர் கடிதம்!

இந்த திட்டமானது பிபிஎஃப் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 15 ஆண்டுகால திட்டத்தில் வரிச் சலுகையும் உண்டு. இந்தியராக இருக்கும் அனைவரும் வைப்பு நிதி கணக்கை தொடங்க முடியும். கணக்கை தொடங்கிய பின்னர் வாடிக்கையாளர் வெளிநாடு சென்றால் அவர்களால் இந்த திட்டத்தை தொடர்ந்து கொள்ள முடியும். பயனர்கள் இந்த திட்டத்தில் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தை போஸ்ட் ஆபீஸில் மட்டுமல்லாது ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் தொடங்கி கொள்ள முடியும். பயனர்கள் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் முதலியனவற்றை வழங்குவதன் மூலம் கணக்கை தொடங்க முடியும். கணக்கை தொடங்க இணைய வங்கியினை லாகின் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள பிபிஎஃப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் Relevant account மற்றும் Minor account என்பதில் தேவையானதை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனை தொடர்ந்து பான் எண்ணை வெரிபை செய்ய வேண்டும். அதன்பின் எவ்வளவு டெபாசிட் செய்யப் போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுத்து மொபைல் எண்ணுக்கு ஒடிபி யை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பின் கணக்கு தொடங்கப்படும். பிபிஎப் கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால் அவரது மனைவி அல்லது வாரிசுகளின் அக்கவுண்டில் பணம் செலுத்தப்படும். பயனர்கள் மாதம் ரூ.6,000 முதலீடு செய்வதன் மூலம் வருடத்திற்கு ரூ.70,000 முதலீடு செய்யப்படுகிறது. 15 வருட முடிவில் ரூ.10,50,000 முதலீடு செய்யப்படுகிறது. பிபிஎப் வட்டி விகிதம் தற்போது 7.1% உள்ளது.

தமிழக அரசின் ஓய்வூதியம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – நிதியமைச்சர் பேட்டி!

அதன் அடிப்படையில் மொத்த வட்டி ரூ.8,48,498. எனவே மொத்தம் 15 வருடம் கழித்து மொத்த முதிர்வு தொகை ரூ.18,98,498 என வழங்கப்படுகிறது. அதே தொகையை அடுத்த 5 வருடங்களுக்கு நீடிக்கும் பட்சத்தில் 20 வருடம் கழித்து, உங்களது முதிர்வு தொகை ரூ. 31,07,201. அதேபோல் அடுத்த 10 வருடங்களுக்கு நீட்டித்தால், 30 வருடம் கழித்து, உங்களது முதிர்வு தொகை ரூ.72,10,425 வழங்கப்படுகிறது. இது போன்ற முறையில் பயனர்கள் முதலீடு செய்யலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!