தமிழக அரசின் ஓய்வூதியம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – நிதியமைச்சர் பேட்டி!

0
தமிழக அரசின் ஓய்வூதியம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - நிதியமைச்சர் பேட்டி!
தமிழக அரசின் ஓய்வூதியம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - நிதியமைச்சர் பேட்டி!
தமிழக அரசின் ஓய்வூதியம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – நிதியமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் தொடர்ந்து தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த திட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு ஊழல் அம்பலமாகியுள்ளது. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கூட்டுறவு வங்கி:

தமிழகத்தில் தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் ஊழல் நிகழ்ந்துள்ளது. அவ்வாறு நிகழ்ந்த ஊழலில் அதிக அளவிலான பணம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சென்னையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கபட்டதில் ஒருவரே சிறிய அளவிலான நிலத்தின் பேரில் கடன் பெற்று தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு ஏழை விவசாயிகள் பயனடையாமல் இருப்பதை அரசு கண்டறிந்துள்ளது.

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.28,000 போனஸ், ஊதிய உயர்வு – அதிரடி தீபாவளி சலுகை!

அதனை தொடர்ந்து நகை கடன் தள்ளுபடியில் கணிசமான தொகை தவறாக நகை கடன் பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை கண்டறிந்து தகுதியானவர்களுக்கு பணத்தை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில் இறந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இறந்தவர்களின் ரேஷன் கார்டில் நியாயவிலை கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Wipro நிறுவனத்தின் சூப்பர் திட்டம் – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! முழு விவரம் இதோ!

இவ்வாறாக செலவு செய்யப்படாத சுமார் 2 ஆயிரம் கோடி நிதிகளை திரும்ப பெற்று வருகிறோம். அதனை சரியான நபர்களை சென்றடையும் விதமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து முதியோர் பென்ஷன் வாங்குபவர்களின் தகுதியானவர்களுக்கு பென்ஷன் வழங்குமாறு முதலமைச்சர் அவர்கள் கூறியுள்ளதை போல அவர்களை கண்டறிந்து பென்ஷன் வழங்க உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். முடிவில் அரசின் திட்டங்கள் தகுதியானவர்களை சென்றடைவதை இந்த திமுக அரசு உறுதி செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!