தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை வேலை – ஜன.27 கடைசி நாள்!

1
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை வேலை - ஜன.27 கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை வேலை - ஜன.27 கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை வேலை – ஜன.27 கடைசி நாள்!

நாடு முழுவதும் தற்போது அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அஞ்சல் துறையில் வேலை:

இந்திய அஞ்சல் துறையில் பொது மக்களுக்கு நலன் தரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை கிராமப்புற மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் சிறந்த காப்பீட்டு முகவர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது கோவில்பட்டி முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிப்.28 வரை சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு – மத்திய அமைச்சகம்!

இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் சுய தொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

8,700 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜன.28 கடைசி நாள்! முழு விபரம் இதோ!

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் முகவர்கள் ரூ.5 ஆயிரத்திற்கான காப்பீட்டு தொகை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பாத்திரம் வடிவில் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை அஞ்சல் நிலையங்களில் இலவசமாக பெற்று அதனை பூர்த்தி செய்து கீழ் வரும் முகவரிக்கு வரும் ஜன.27ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனுப்ப வேண்டிய முகவரி – முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி 628-501. இந்த பணி குறித்த கூடுதல் விபரங்கள் அறிய 04632220368, 04636222313 அல்லது 04633222329 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!