தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் பொருட்கள் குறைந்தால் அது குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழக அரசு மக்கள் வரும் பொங்கல் பாண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக பொங்கல் வைக்க தேவையான உணவு பொருட்களுடன் பண்டிகை கால சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஒரு முழு கரும்பும் சேர்த்து மொத்தம் 21 பொருட்கள் வழங்க திட்டமிட்டது. அரசின் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் மக்கள் ஆகியவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் சூப்பர் ஏற்பாடு!

தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. அதன் பின்னர், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் தமிழக கூட்டுறவு சங்கத்தில் உள்ள அனைவரும் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள், இவர்கள் அரசுக்கு கலங்கம் விளைவிக்க நினைத்து பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடி செய்து வருகின்றனர். அரசு மக்களுக்கு வழங்கும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் பல பொய்யான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்படாமல் உள்ளது.

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? கல்வித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

ஆனால் முதல்வர் முக ஸ்டாலின் தான் அளித்த வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்துவதோடு பல புதிய திட்டங்களையும் செயல்படுத்துகிறார் என்று கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பை பெரும் மக்கள் அதில் 21 பொருட்கள் சரியாக இருப்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். 18005993540 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். மக்கள் புகார் அளிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!